- Ads -
Home சற்றுமுன் அதிகரிக்கும் கொரோனோ! ஆலோசனையில் முதல்வர்! பொறுப்பின்மை என விமர்சிக்கும் ஸ்டாலின்!

அதிகரிக்கும் கொரோனோ! ஆலோசனையில் முதல்வர்! பொறுப்பின்மை என விமர்சிக்கும் ஸ்டாலின்!

coronavirus
coronavirus

நாளுக்கு நாள்  ஒருவனா நோய் தாக்கம் அதிகரித்து வருகிறது கொரானா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் ஆலோசனை  நடத்திவருகிறார் ..

நோயை கட்டுப்படுத்துவது தொடர்பாக அரசுக்கு மருத்துவ குழு பரிந்துரைகளை வழங்குகிறது. பிரதமர் மோடியுடன் நாளை மறுநாள் ஆலோசனை நடத்த உள்ள நிலையில் மருத்துவ குழுவின் கருத்தை கேட்கிறார், முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர், செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் எடுக்க வேண்டிய நடவடிக்கை, சிகிச்சை முறை உள்ளிட்ட பரிந்துரைகள் ஆய்வு செய்யப்படுகின்றன 

மேலும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் ஊரடங்கில் மாற்றம் கொண்டு வருவது குறித்து முடிவு எடுக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது மருத்துவ குழுவுடன் ஆலோசனை நடத்திய பிறகு அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.

இதனிடையே சென்னை-யில் ராயபுரம் மண்டலத்தை தொடர்ந்து தண்டையார்பேட்டை-யில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியுள்ளதால் கொரோனாவின் பாதிப்பு அதிகரித்துள்ளதை அதிகாரிகள் உணர்ந்துள்ளனர் 

ராயபுரம் மண்டலத்தில் 5,216 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது தண்டையார்பேட்டை – 4,082; தேனாம்பேட்டை – 3,844;  கோடம்பாக்கம் – 3,409 என அதிகபட்ச அளவுகளை சென்னை மண்டலம் பதிவு செய்து வருவதால் அதிகாரிகள் கொரோனா தடுப்பு பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர். 

edappadi video conference1

இந்நிலையில் இன்று காலை மு க ஸ்டாலின் கொரோனா பாதிப்புகள் குறித்து கூறிய போது  முதல்வரின் பொறுப்பின்மையால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் ஏற்பட்டிருப்பதாக குற்றம்சாட்டினார் மேலும்  கொரோனா இறப்பு விவரங்களை தமிழக அரசு வெளிப்படையாக கூற வேண்டும்… என்றும் அவர் கேட்டுக் கொண்டார் 

stalin 2

கொரோனாவால் 2 மாதங்களாக தமிழகம் கடும் சிரமத்தை சந்தித்து வருகிறது… நீங்கள் குறிப்பிட்டுள்ள முக ஸ்டாலின், சென்னையில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது, நாட்டிலேயே கொரோனா தொற்று பரவல் அதிகரிக்கும் மாநிலங்களில் தமிழகம் 2வது இடம் பெற்றுள்ளது என்று கவலை தெரிவித்தார் 

அரசின் அலட்சியத்தால் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது என்றும், கொரோனா தொற்று அதிகரித்த நிலையில் டாஸ்மாக் மதுபானக் கடைகளை திறந்தது வேதனையானது… என்றும் குறிப்பிட்டுள்ளார் முகஸ்டாலின்

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version