- Ads -
Home சற்றுமுன் தமிழகத்தில் இன்று 2,710 பேருக்கு கொரோனா பாதிப்பு; சென்னையில் 1,487 பேருக்கு தொற்று!

தமிழகத்தில் இன்று 2,710 பேருக்கு கொரோனா பாதிப்பு; சென்னையில் 1,487 பேருக்கு தொற்று!

coronavirus
coronavirus

தமிழகத்தில் கொரோனா தொற்றால் மேலும் 2,710 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மொத்தம் 62,087 ஆக  உயர்ந்துள்ளது. சென்னையில் 1,487 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  இதை அடுத்து சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 42,659ஆக   உயர்ந்துள்ளது.

 இன்று சென்னையில் வீடியோ வாயிலாக அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம்  பேசினார். கொரோனா நோய் பாதிப்பு குறித்து விளக்கம் அளித்தார். மருத்துவத் துறையினர், களப் பணியாளர்களுக்கு விஜயபாஸ்கர் பாராட்டு  தெரிவித்தார்.  மேலும் கொரோனா பரிசோதனைகளை அதிகரிப்பதுதான், அரசின் வியூகம்   என்றார் அமைச்சர் விஜயபாஸ்கர்.

 சுகாதாரத் துறை வெளியிட்ட அறிக்கையின் படி தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 37 பேர் உயிரிழந்துள்ளனர்.  இதை அடுத்து தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 794ஆக உயர்வு  கண்டுள்ளது.

 அதேநேரம்தமிழகத்தில்  இன்று ஒரே நாளில் 1,358 பேர் டிஸ்சார்ஜ்  செய்யப்பட்டு தங்கள் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.  இதுவரை 34,112 பேர்  தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

corona june22a

தமிழகத்தில் 87 கொரோனா பரிசோதனை மையங்கள் உள்ளன  என்றும் தினமும் 30,000 பரிசோதனை எடுக்கும் அளவுக்கு அதிகரிக்கப்பட்டுள்ளது  என்றும் சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும்

இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் தமிழகத்தில் கொரோனா பரிசோதனை  மேற்கொள்ளப்படுவதாகவும் அறிக்கை தெரிவிக்கிறது.

 இதுவரையிலான பாதிப்பு அளவில் அதிகபட்சமாக தமிழகத்தில் ஒரே நாளில் 2,710 பேருக்கு கொரோனா பாதிப்பு  ஏற்பட்டுள்ளது இதை அடுத்து தமிழகத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 62,087ஆக உயர்வு  கண்டுள்ளது.

corona june22b

 தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும்  1,487 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி  செய்யப்பட்டுள்ளது. 

இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் தமிழகத்தில் கொரோனா பரிசோதனை தமிழகத்தில் மொத்தம் 9,19,204 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இந்தியாவிலேயே, கொரோனாவில் இருந்து அதிகம் பேர் குணமடைந்த மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இரு மடங்காக உயர்வதற்கு 15 – 17 நாள் வரை ஆகிறது  என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்

 மேலும் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து இதுவரை 55% பேர் குணமடைந்துள்ளனர்  என்றும் ரெம்டெசிவிர் போன்ற உயிர் காக்கும் வீரியமிக்க மருந்துகளை தமிழக அரசு கொள்முதல் செய்துள்ளது  என்றும் அவர் கூறினார்

சென்னையை அடுத்து, சென்னையைச் சுற்றியுள்ள மாவட்டங்களான செங்கல்பட்டு மாவட்டத்தில், 126 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 120 பேருக்கும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 56 பேருக்கும் இன்று தொற்று கண்டறியப் பட்டது.

corona june22c

அடுத்து, மதுரையில் அதிகபட்ச அளவாக இன்று 153 பேருக்கு தொற்று கண்டறியப் பட்டது. திருவண்ணாமலை மாவட்டத்தில் 130 பேருக்கும், திருச்சி மாவட்டத்தில் 51 பேருக்கும் தொற்று கண்டறியப் பட்டது.

தென் மாவட்டங்களில், தென்காசி மாவட்டத்தில் 20 பேருக்கும், தூத்துக்குடி மாவட்டத்தில் 57 பேருக்கும், திருநெல்வேலி மாவட்டத்தில் 5 பேருக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தில் 8 பேருக்கும் தொற்று உறுதி செய்யப் பட்டது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version