- Ads -
Home சற்றுமுன் அறுபதிலும் ஆசை வரும்! அற்புதமான தீர்வைத் தரும்!

அறுபதிலும் ஆசை வரும்! அற்புதமான தீர்வைத் தரும்!

ஜின்சாங்

ஆண்களின் முக்கிய உடல்நல பிரச்சனைகளுக்கு தீர்வாக இருப்பது தான் ஜின்செங். இது அதிக மருத்துவநலன்களை கொண்டுள்ளது

ஜின்செங் என்பது ஒரு மூலிகை. இந்த மூலிகையின் தோற்றம் எங்கு தெரியுமா? இது சீனா, ரஷ்யா போன்ற நாடுகளில் கிடைத்த ஒரு மூலினை. இதை 9 ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு அரேபியர்கள் ஐரோப்பிய நாடுகுளிலும் இதை பரப்புகிறார்கள்.

இத்தாவரத்தின் வேர் மருத்துவப்பயன் கொண்டவை. பயிரிடப்பட்ட தாவரங்களில் இருந்தே வேர்கள் பெறப்படுகின்றன. பயிரிடப்பட்டு நான்கு ஆண்டுகள் கழித்தே வேர்கள் பலன் தரத் தொடங்கும். இலையுதிர்காலத்தில் சேகரிக்கப்படும் வேர்கள் ஆவியில் வேகவைத்து உலர்த்தப்படும்

இத்தாவரத்தில் பலவிதமான வேதிப்பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஜின்செங் வேரில் 3 சதவிகிதம் ஜின்செனாய்டுகள் உள்ளன. இவை 25 வகைகளாக பிரிக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. இவை டிடெர்பினாய்டு சப்போனின்களாகும். இவற்றுடன் அசிட்டிலைன், கூட்டுப்பொருட்கள், செஸ்கியூடெர்பின்கள்,பெனாக்சன்கள், உள்ளன.

பசியினால் ஏற்படும் களைப்பு வெப்ப நிலைகளில் உயர்-குறை மட்டங்கள், மற்றும் மனம், உணர்வு இறுக்கங்களை தாங்க உடலினை ஏற்றதாகச் செய்யும். இவை மட்டுமின்றி தூக்கத்தை தூண்டி நன்றாக உறக்கம் வரச்செய்யும். நம் உடலில் இயல்பாக உள்ள ஹார்மோன்கள் போன்ற அமைப்புடைய ஜின்செனாய்டுகள் இதற்கு அடிப்படையாக உள்ளன. ஜின்ஜெங் நோய் எதிர்ப்பு சக்தியினை மேம்படுத்தி கல்லீரல் செயல்பாட்டினை கூட்டுகிறது. நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது வயோதிகத்தால் ஏற்பட்ட பலவீனம் போக்கவல்லது.

சீனாவில் ஓட்டப்பந்தைய வீரர்களுக்கு வலுவேற்றியாகவும், ஊக்குவியாகவும் ஜின்செங் பயன்படுகிறது. உடல்சார்ந்த இறுக்கத்தினைப் போக்க வல்லது. ஆண்களுக்கு பால் உணர்வு ஊக்குவியாகவும், பயன்படுத்தப்படுகிறது. வடக்கு மற்றும் மைய சீனாவில் உள்ள மத்திய வயதினர்கள் இதனை வலுவேற்றியாக உட்கொள்கின்றனர். குளிரை தாங்க உதவுகிறது. மேலை நாடுகளில் வலுவேற்றியாகவும், மன இறுக்கங்களைத் தாங்கவும் எடுத்துக்கொள்ளப்படுகிறது.

இந்த வேரை தான் அவர்கள் மலட்டுத் தன்மை நீங்கி, விந்துவை வீரியமாக்கவும் விறைப்புப் பிரச்சினை சரியாகவும் மருந்தாகப் பயன்படுத்துகிறார்கள்.

பொதுவாக ஆண்களுக்கு அவர்களது 40 வயதில் 5% விரைப்பு தன்மை குறைய ஆரம்பிக்கிறது, அதன் பின்னர் ஒரு ஆண் 70 வயதை அடையும் போது விரைப்பு தன்மையின் அளவு 15 சதவீதம் வரை குறைந்து விடுகிறது.

ஆனால் இந்த ஜின்செங்கை எடுத்துக் கொள்ளும் ஒருவருக்கு உடலில் ஹார்மோன் மற்றும் இரத்த அழுத்த அளவை அதிகரிக்காமலேயே உடலுறவில் ஈடுபடும் திறனை அதிகரிக்கிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஆண்களுக்கு டைப் 2 சர்க்கரை நோய் வர அதிகமான காரணங்கள் உள்ளன. இது இரத்தத்தில் உள்ள குளூக்கோஸ் அளவினை குறைப்பதன் மூலமாக இந்த பிரச்சனையை தீர்க்கிறது. ஆண்களுக்கு விரைப்பு தன்மை குறைவாக இருப்பதற்கான காரணங்களில் ஒன்று தான் சர்க்கரை நோய். இந்த ஜின்செங் மூலிகையானது ஆண்களின் விரைப்பு தன்மை மற்றும் சர்க்கரை நோய் இரண்டையும் ஒன்றாக தீர்த்து வைக்க உதவுகிறது.

எப்போதும் ஜின்செங் வேரை தனியாக உட்க்கொள்ள கூடாது. இதனை உணவுடன் சேர்த்து தான் சாப்பிட வேண்டும். இதனால், சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இது சர்க்கரையின் அளவை மிகவும் அதிகமாக குறைத்து விடக் கூடிய வாய்ப்பு உண்டாகும். மேலும் இது மருந்தின் வேலைக்கு இடையூறு செய்யும். எனவே நீங்கள் மாத்திரை மருந்துகளை சர்க்கரை நோய்க்காக எடுத்துக் கொண்டு வந்தால், அதனுடன் சேர்த்து இந்த வேரை சாப்பிட கூடாது. மருத்துவரின் ஆலோசனை பெற்று தான் இதனை எடுத்துக் கொள்ள வேண்டும்

இன்றைய காலகட்டத்தில் ஆண்கள் பலர் கேன்சர் நோயினால் பாதிக்கப்படுகின்றனர். ஜின்செங்கில் உள்ள அதிகளவு ஆன்டி ஆக்ஸிடண்டுகள் உங்களது உடலில் உள்ள செல்களை பாதுக்காக்கிறது. மேலும் இது மன அழுத்தத்தை தரக் கூடிய செல்களையும் தடுத்து கேன்சர் நோய் வராமல் உங்களை பாதுகாக்கிறது.

இருதய நோய்கள் வாதம், சர்க்கரை நோய் போன்றவற்றிற்கு உடல் எடை அதிகமாக இருப்பது ஒரு முக்கிய காரணமாக அமைகிறது. ஜின்செங் ஆனாது உடலில் உள்ள ஹார்மோன்கள், மெட்டபாலிசம் போன்றவற்றை சரியாக இயங்க வைப்பதன் மூலமாக உடல் எடையை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

ஆண்களின் மெனோபாஸ் நேரத்தின் போது அவர்களுக்கு உடலில் சில மாற்றங்கள் உண்டாகின்றன. அதில் ஒன்று தான் இந்த நியாபக மறதியாகும். அதுவும் சர்க்கரை நோய் இருந்தால், இந்த சமயத்தில் நியாபக மறதி உண்டாகும். ஆனால் அதிஷ்டவசமாக, இந்த சமயத்தில் வரும் நியாபக மறதியை வெல்ல உள்ள அபூர்வ மூலிகை தான் இந்த ஜிஞ்செங் ஆகும். மேலும் இது வயது முதிர்வால் வரும் பிரச்சனைகளை எதிர்க்கொள்ளவும் உதவுகிறது.

மிக விரைவாக உறுப்பு சுருங்குதல், விந்து நீர்த்துப் போதல், வேகமாக விந்து வெளியேறுவது போன்ற பல பிரச்சினைகள் இருக்கின்றன. இதற்கு அடிப்படையாக இருக்கக்கூடிய பிரச்சினை தான் விறைப்புப் பிரச்சினை.

இந்த வேரானது பெண்களுக்கு பாலுணர்வை அதிகரிக்க செய்கிறது. இதனால் அவர்களுக்கு உடலுறவு நாட்டமின்மை போன்ற பிரச்சனைகளை சரிப்படுத்துகிறது.

ஜின்செங்கில் உள்ள ஜின்செனாசைட் அல்லது பேனாக்சாசைட் என்ற ஒரு மூலப்பொருளே ஆண்குறி உயிர்ப்படைய மூலக் காரணம் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

மூலிகையின் வெண்மையாக்கும் பண்புகள் உங்கள் சருமத்திற்கு பிரகாசமான தோற்றத்தைக் கொடுக்கும். எனவே வழக்கமாக ஜின்செங்கை உபயோகிக்கும் நபர்களில் வயதாவதைத் தடுத்து அழகான முகத்தோற்றத்தை பெற இது உதவுகிறது.

ஜின்ஸெங் சாறு கீல்வாத அறிகுறிகளைக் குறைப்பதாகவும் கண்டறியப்பட்டது, மேலும் இவை மூட்டுகளின் வீக்கம் மற்றும் மூட்டு வலிகள் ஆகியவற்றையும் சரி செய்கிறது. எரிச்சலூட்டும் குடல் நோய் உள்ளவர்களுக்கு வயிற்று வலியைக் குறைக்க ஜின்ஸெங் பெருமளவு பயன்படுகிறது.

ஜின்ஸெங் ஆனது நுரையீரல் பாக்டீரியாவைக் குறைக்கும் மற்றும் சிஸ்டிக் ஃபைப்ரோஸிஸைத் தடுக்கும் என்று ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.

சிபிஓடி(CPOD) நோய்க்கு சிகிச்சையளிக்க ஜின்செங் பயன்படுவதாக ஆய்வுகள் கண்டறிந்துள்ளது. சிபிஓடி என்பது நுரையீரல் சம்பந்தப்பட்ட ஒரு நோயாகும் அதாவது நுரையீரலுக்கு குறைவான காற்று பரிமாற்றம் நடைபெறுவதாகும். இதனால் சுவாசிப்பதில் சிக்கல் ஏற்படலாம். மேலும் இந்த மூலிகை நோயாளிகளுக்கு உடற்பயிற்சி திறனை மேம்படுத்துகிறது

ஜின்ஸெங் பண்புகள் மாதவிடாய் தொடர்பான தசைப்பிடிப்பை
கட்டுப்படுத்துகிறது. ஒரு கப் ஜின்ஸெங் தேநீர், மாதவிடாய் பிடிப்பால் ஏற்படும் வலி மற்றும் அசவ்கரியத்தை கணிசமாகக் குறைக்கும். இவ்வாறாக ஜின்செங் ஆனது மாதவிடாயில் ஏற்படும் வலி மற்றும் சோர்வை குறைக்கிறது. மேலும் இது சரியான இரத்தப்போக்கை ஊக்குவிக்கிறது.

ஜின்செங் ஆனது அழகை பராமரிப்பதிலும் தன் பங்கை ஆற்றுகிறது. இது தோலில் உண்டாகும் தடிப்புகள் மற்றும் வீக்கங்களை சரிசெய்கிறது. மேலும் முகத்தில் ஏற்படும் முகப்பருக்கள், கரும்புள்ளிகள் மற்றும் காயங்களில் இருந்து குணமளிக்கிறது(10).

அதுமட்டுமில்லாமல் வயதாவதால் ஏற்படும் தோல் சுருக்கங்களை தாமதப்படுத்துகிறது. இந்த மூலிகை கொலாஜனை அதிகரிக்கும். இது சருமத்தை உறுதிப்படுத்துகிறது மற்றும் சுருக்கங்கள் வருவதை தாமதப்படுத்த உதவுகிறது.

மூலிகையின் வெண்மையாக்கும் பண்புகள் உங்கள் சருமத்திற்கு பிரகாசமான தோற்றத்தைக் கொடுக்கும். எனவே வழக்கமாக ஜின்செங்கை உபயோகிக்கும் நபர்களில் வயதாவதைத் தடுத்து அழகான முகத்தோற்றத்தை பெற இது உதவுகிறது. எனவே தான் இதிலிருந்து பல அழகுசாதனப்பொருட்கள் இப்பொழுது தயாரிக்கப்பட்டு வருகின்றன.

பல ஆய்வுகள் ஜின்ஸெங் முடி வளர்ச்சியை எவ்வாறு மேம்படுத்துகிறது என கூறுகிறது. ஜின்ஸெங் சாறானது மயிர்க்கால்களை வலுப்படுத்துவதோடு முடி உதிர்வதைத் தடுக்கவும் பயன்படுகிறது. ஜின்ஸெங் ஆனது,

உச்சந்தலையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, இதன் விளைவாக முடியைப் பாதுகாக்கும். எனவே ஜின்செங்கின் அனைத்து பயன்களையும் நீங்கள் பெற எண்ணினால் அதன் வேர்களை(ginseng roots in tamil) தேநீரில் கொதிக்க வைத்து குடித்தால் கட்டாயம் அதன் பயன்களை பெறலாம்.

ஜின்செங் என்பது இந்திய அஸ்வகந்தா என்று அழைக்கப்படுகிறது. இப்ப இந்த பேரை எங்கயோ கேள்விப்பட்ட மாதிரி இருக்குமே. அதேதான் நம்ம ஊர்ல எல்லா சூப்பர் மார்க்கெட்டுகளிலும் நாட்டு மருந்து கடைகளிலும் இந்த அஸ்வகந்தா வேராகவும் கிடைக்கிறது. பொடியாகவும் கிடைக்கிறது.

பொடியில் கலப்படம் இருக்கும் என்று நீங்கள் நினைத்தால் வேரை வாங்கி நீங்களே பொடி செய்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த மூலிகையை தினமும் இரவு படுக்கச் செல்வதற்கு முன் சாப்பிட்டு வந்தால் தடி ஊன்றி நடக்கும் வயது வரைக்கும் விறைப்புப் பிரச்சினையே வராதாம்.

இந்த அஸ்வகந்தாவை தினமும் தூங்கச் செல்வதற்கு முன் நன்கு காய்ச்சிய பசும் பாலில் கலந்து குடிக்கலாம்.

பொதுவாக பால் நிறைய குடிக்காத பழக்கம் உள்ளவர்கள் வெந்நீரில் போட்டு சிறிது எலுமிச்சையும் தேனும் கலந்து டீயாகவும் குடிக்கலாம். மாலை நேரங்களில் சூப் குடிக்கும் போது அதில் கூட இந்த பொடியை தூவி சாப்பிட முடியும்.

இந்த வேரிலிருந்து தயாரிக்கப்பட்ட மாத்திரைகள் கூட கிடைக்கின்றன.

இதன் தைலங்களும் கிடைக்கின்றன. இதை தினமும் இரவில் ஆணுறுப்பில் தடவி மசாஜ் செய்துவிட்டு, பின் காலையில் குளிக்கும்போது வெதுவெதுப்பான நீர் கொண்டு அந்த பகுதியைக் கழுவுங்கள்.

உடலில் தேங்கிப்போய் நிற்கும் கொழுப்பை கரைக்க ஏராளமான வழிகள் இருந்தாலும் ஜின்ஸெங் கொழுப்பை கரைப்பதில் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது

ஜின்ஸெங்கில் பழுப்பு நிற கொழுப்பு திசு அல்லது பிஏடி உள்ளது. இது நம் உடலில் தேங்கியுள்ள கொழுப்பை விரைவாக ஆற்றலாக மாற்றும். ஜின்ஸெங்கை உட்கொண்ட பிறகு நீங்கள் அதிக ஆற்றலை பெறுவதும் ஒரு விதத்தில் காரணமாகும்.

இந்த மூலிகை கலோரிகள் எரியும் முறையை நிர்வகிக்கும் குடல் பாக்டீரியாக்களின் உற்பத்தியைத் தூண்டுகிறது. இதனால் உடல் வளர்ச்சிதை மாற்றத்தில் மாற்றம் ஏற்பட்டு எடை இழப்புக்கு வழி வகுக்கிறது.

இது கல்லீரலின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது மற்றும் அதிக செரிமான சாறுகளின் உற்பத்திக்கு வழிவகுக்கிறது. இந்த செயல்முறை கொழுப்பு கல்லீரலில் தங்குவதை தவிர்க்கிறது. கல்லீரலில் கொழுப்பு தங்குவது முறையற்ற உணவுப் பழக்கம், கல்லீரலின் முறையற்ற வேலை காரணமாக உண்டாகிறது. எனவே இது கல்லீரலில் கொழுப்பு படிவதை தடுப்பதால் நம்முடைய எடை இழப்புக்கு உதவுகிறது.

எனவே நீங்கள் எடை இழக்க ஆசைப்பட்டால் ஜின்ஸெங்கை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இது உங்க எடை இழப்பு பயணத்தை எளிதாக்கும்.

ஊட்டச்சத்துக்கள் அளவு தினசரிஅளவுகலோரிகள் 25 கொழுப்பிலிருந்து கலோரிகள் 0 0%மொத்த கொழுப்பு 0.0 g. 0%நிறைவுற்ற கொழுப்பு 0.0 g. 0%கொலஸ்ட்ரால் 0.0 g. 0%சோடியம் 5 mg. 0%கார்போஹைட்ரேட்டுகள் 6.0 g. 2%உணவு இழை 0.0 g. 0%சர்க்கரைகள் 6.0 g. 2%புரதம் 0.0 g. 0%வைட்டமின் ஏ 0.0 g. 4%வைட்டமின் சி 6%கால்சியம் 0 %இரும்பு 0%

ஜின்செங்கின் முழுமையான பயங்களைப் பெற அதனை தேநீர் மூலமாக எடுத்துக்கொள்வதே சிறந்தது. உங்கள் அருகிலிருக்கும் கடைகளில் ஜின்செங் தேநீர் பொடியை வாங்கி பயன்படுத்துங்கள் இல்லையெனில் நீங்களே ஜின்செங்கை வாங்கி அதன் வேர்களை பிரித்து தேநீரில் போட்டு கொதிக்க வைத்து குடியுங்கள்.

ஜின்செங் ஆனது இரவு நேரங்களில் எடுத்துக்கொள்ளும்போது உங்களின் தூக்கத்தை கெடுத்துவிடும். எனவே இதனை காலை நேரங்களில் எடுத்துக்கொள்வது நல்லது.டைப் 2 நீரிழிவு நோயைக் கையாள்வதற்கு, ஒரு நாளைக்கு 200 மில்லிகிராம் எடுத்துக்கொள்ளலாம்.

singsen

விறைப்புத்தன்மைக்கு சிகிச்சையளிக்க, 900 மில்லிகிராம் ஜின்ஸெங்கை தினமும் மூன்று முறை எடுத்துக் கொள்ளுங்கள்.

மன அழுத்தம் அல்லது சோர்வுக்கு, தினமும் 1 கிராம் ஜின்ஸெங் எடுத்துக் கொள்ளுங்கள்.அமெரிக்க ஜின்ஸெங்கை புதிய அல்லது உலர்ந்த வடிவத்தில் வாங்கலாம். தேர்ந்தெடுக்கும்போது, ​​நொறுக்கப்பட்ட அல்லது உடைந்த தோற்றமின்றி குண்டாகவும், உறுதியாகவும், வெளிர் நிறமாகவும் இருக்கும் வேர்களை வாங்க வேண்டும்.

காற்று புகாத, உலர்ந்த மற்றும் ஒளி எதிர்ப்பு தன்மை கொண்ட கொள்கலன்களில் 15 முதல் 30 ° C (59 மற்றும் 86 ° F) வரை அறை வெப்பநிலையில் வைக்க வேண்டும்.

அதை குழந்தைகளுக்கு எட்டாதவாறு வைத்திருத்தல் நல்லது.ஜின்செங் தற்போது அனைத்து சூப்பர் மார்க்கெட்டுகளில் கிடைக்கிறது.

மேலும் இதனை ஆர்கானிக் கடைகளிலும் ஆன்லைன் வர்த்தகத்தின் மூலமாகவும் வாங்க முடியும்

குழந்தைகளில், ஜின்ஸெங் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்றதாக இருக்கலாம். அவர்கள் அதிலிருந்து விலகி இருப்பதை உறுதி செய்யுங்கள்.

ஜின்ஸெங்கில் உள்ள சில கூறுகள் கருச்சிதைவை ஏற்படுத்தக்கூடும்.தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு ஜின்ஸெங் ஆரோக்கியமானதா என தெரியவில்லை.எனவே, நீங்கள் கர்ப்பமாக இருந்தால் அல்லது தாய்ப்பால் கொடுத்தால் ஜின்ஸெங் எடுத்துக்கொள்வதை தவிர்க்கவும்.

ஜின்ஸெங் இதய துடிப்பு அல்லது இரத்த அழுத்தத்தை பாதிக்கலாம். இதய பிரச்சினைகள் உள்ளவர்கள் ஜின்ஸெங் உட்கொள்ளும் முன் மருத்துவரை அணுக வேண்டும்.

ஜின்ஸெங் ஆனது , இரத்த சர்க்கரை மருந்துகளை உட்கொள்ளும் மக்களில் இரத்த சர்க்கரை அளவை மிக அதிகமாக குறைக்கலாம் என்பதால் சர்க்கரை நோய் உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனையோடு இதனை எடுத்துக்கொள்வது நல்லது.

ஜின்ஸெங் தூக்கமின்மையை ஏற்படுத்தக்கூடும், குறிப்பாக மாலை நேரங்களில் தாமதமாக எடுத்துக் கொண்டால் இது ஏற்படும். உங்களுக்கு தூக்கக் கஷ்டம் இருந்தால் அதைத் தவிர்க்கவும்.

ஜின்ஸெங் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடும் என்பதால்,எதாவது சிகிச்சை நீங்கள் எடுத்து கொண்டிருந்தால், சிகிச்சைகளின்போது நோயெதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டை தற்காலிகமாக குறைக்க கொடுக்கப்பட்ட மருந்துகளின் செயல்திறனை இது குறைக்கலாம்.

ஜின்ஸெங், இரத்த உறைவுக்கு இடையூறு செய்யலாம். உங்களுக்கு இரத்தப்போக்கு இருந்தால் அதைத்தவிர்க்கவும்

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version