- Ads -
Home சற்றுமுன் பேஸ்புக் மாதிரி வாட்ஸ்அப்பிலும் கவர் இமேஜ் வசதி!

பேஸ்புக் மாதிரி வாட்ஸ்அப்பிலும் கவர் இமேஜ் வசதி!

whatsapp

மெட்டா நிறுவனத்தின் குறுஞ்செய்தி அனுப்பும் செயலியான வாட்ஸ் அப்பில், இனி ஃபேஸ்புக் போலவே கவர் இமெஜ் வைத்துக்கொள்ளும் வசதி வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முதற்கட்டமாக பிசினஸ் வாட்ஸ் அப் அக்கவுண்ட்களுக்கு அறிமுகப்படுத்தப்பட உள்ள இந்த வசதி, அடுத்தடுத்து பீட்டா பயனாளர்களுக்கும் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலக அளவில் தகவல்களை பரிமாறிக்கொள்ள உதவும் முதன்மையான செயலியாக வாட்ஸ் அப் உள்ளது. வெறும் குறுச்செய்திகள் மட்டுமின்றி, வீடியோ, வாய்ஸ், டெக்ஸ்ட் சேட் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் மற்றும் தனிநபர் மட்டுமல்லாது குழுவிலும் செய்திகளை பரிமாறிக்கொள்ளும் வசதிகள் உள்ளதால் வாட்ஸ் அப்பை உலகம் முழுவதும் பில்லியன் கணக்கிலான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

ஆன்ட்ராய்டு, ஆப்பிள், விண்டோஸ் மொபைல், நோக்கியாவின் சிம்பியன், பிளாக்பெரி போன்ற பல்வேறு அலைபேசி இயங்குதளங்களிலும் இயங்கும் வகையில் வாட்ஸ் அப் வடிவமைக்கப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பம்சமாக அமைந்துள்ளது.

மல்டி டிவைஸ் சப்போர்ட், மெசேஜ் தானாக டெலிட், ஆடியோ மெசெஜ் ப்ரீவ்யூ, என நாள் ஒரு வண்ணம் பொழுதொரு மேனியுமாக வாட்ஸ் அப்-பை அதன் தாய் நிறுவனமான மெட்டா அப்டேட் செய்து வருகிறது.

இந்நிலையில் ஃபேஸ்புக்கைப் போலவே கவர் இமேஜ் வைத்துக்கொள்ளும் வசதியை வாட்ஸ் அப்பில் அறிமுகப்படுத்த மெட்டா நிறுவனம் முயன்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த அம்சத்தை வாட்ஸ்அப் டெவலப்மெண்ட் டிராக்கர் WABetaInfo சமீபத்தில் கண்டறிந்துள்ளது.

WABetaInfo பகிர்ந்த ஸ்கிரீன்ஷாட்டின் படி, யூஸர்களின் வணிக அமைப்புகளில் கேமரா பொத்தானை அறிமுகப்படுத்த WhatsApp திட்டமிட்டுள்ளது.

இதில், யூஸர்கள் ஒரு புகைப்படத்தைத் தேர்ந்தெடுக்கலாம் அல்லது புதிய ஒன்றை அட்டைப் புகைப்படமாகப் பயன்படுத்தலாம் போன்ற புதிய வசதி அறிமுகமாக வாய்ப்புள்ளது.

உங்களுடைய காண்டாக்ட் லிஸ்ட்டில் உள்ள வேறு எந்தப் பயனரும் உங்கள் வணிகச் சுயவிவரத்தைப் பார்வையிடும் போது, ​​அவர்களால் உங்களுடைய டிபி மட்டுமல்லாது, நீங்கள் புதிதாக இணைத்துள்ள அட்டைப் படத்தையும் இனி பார்க்க முடியும்.

கவர் போட்டோஸை அமைக்கும் வசதி தற்போது வாட்ஸ்அப் பிசினஸ் அக்கவுண்ட் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே உருவாக்கப்பட்டு வருகிறது. விரைவில் இது பீட்டா யூஸர்களுக்கும் மாற்றப்படும் என தெரிகிறது.

இதற்கிடையில், வாட்ஸ்அப் எதிர்கால புதுப்பிப்பில் ‘Community’ என்ற அம்சத்தை வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. ‘Community’ என்பது ஒரு தனிப்பட்ட இடமாகவும், குழு நிர்வாகிகள் வாட்ஸ்அப்பில் குழு மீது அதிக கட்டுப்பாட்டுடன் செயல்படும் வகையிலான அப்டேட்கள் உருவாக்கப்பட உள்ளன.

இதுவும் வாட்ஸ் அப் குரூப் சாட் போன்றது தான் என்றாலும், அட்மின்கள் நினைத்தால், வேறு குழுக்களை கூட இதனுடன் இணைத்துக்கொள்ளும் படி வசதிகள் செய்யப்பட உள்ளது.

இதன் மூலம் வாட்ஸ் அப் பயன்படுத்துவோர் ஒரு ‘Community’ இருந்தாலும், பல குழுக்களைச் சேர்ந்த நபர்களுடன் கலந்துரையாடவும், கருத்துகளை பரிமாறிக்கொள்ளவும் வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version