பாட்னா: ”தில்லி சட்டசபைத் தேர்தல் முடிவுகள், பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடுகள் மீதான மக்களின் கருத்து கணிப்பாகும். இதே போன்ற ஒரு முடிவையே பீகாரில் நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலிலும், பா.ஜ.க, சந்திக்கும்,” என்று ஐக்கிய ஜனதா தள தலைவரும் பீகார் முன்னாள் முதல்வருமான நிதிஷ்குமார் கூறியுள்ளார். தில்லி சட்டசபைத் தேர்தல் முடிவுகள் குறித்து அவர் கருத்து தெரிவித்த போது, தில்லி தேர்தல் முடிவுகள், பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடுகள் மீதான மக்களின் கருத்துக் கணிப்புதான். பா.ஜ.க,வின் ஒன்பது மாத ஆட்சியில், மோடிக்கு எதிராக மக்களின் மனநிலை மாறியுள்ளது. தேர்தல் பிரசாரத்தின் போது அளித்த வாக்குறுதிகள் எதையும் மோடி நிறைவேற்றவில்லை. அதுவே, இந்தத் தோல்விக்குக் காரணம். ‘கறுப்பு பண மீட்பு, விவசாயிகளுக்கு போனஸ், பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து என, பல வாக்குறுதிகளை தேர்தல் பிரசாரத்தின் போது மோடி வழங்கினார். ஆனால் எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை. பீகாரில், வரும் நவம்பர் மாதத்துக்கு முன்னர் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. பா.ஜ.க,வின் அடுத்த இலக்கு இந்த மாநிலம்தான். இங்கும் தில்லியில் சந்தித்தது போன்ற தோல்வியை அந்தக் கட்சி சந்திக்கும் என்று கூறினார்.
தில்லியில் நடந்தது பீகாரிலும் நடக்கும்: நிதிஷ்குமார்
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari