- Ads -
Home சற்றுமுன் தமிழ்நாட்டில் நகர்ப்புற சேவைகளை மேம்படுத்த ரூ.1,040 கோடி; ஆசிய வளர்ச்சி வங்கி ஒப்பந்தம்!

தமிழ்நாட்டில் நகர்ப்புற சேவைகளை மேம்படுத்த ரூ.1,040 கோடி; ஆசிய வளர்ச்சி வங்கி ஒப்பந்தம்!

பயன்கள் குறித்து விளக்குவதற்காக கோயம்புத்தூரிலும் மதுரையிலும் அனைத்து மகளிர் சுய உதவி குழுக்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.

asian devlopment bank

தமிழ்நாட்டின் மூன்று நகரங்களில் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் வகையில், கழிவுநீர் சேகரிப்பு மற்றும் சுத்திகரிப்பு, கழிவு நீர் அகற்றுதல் மற்றும் குடிநீர் விநியோக முறைகளை உருவாக்குவதற்காக மத்திய அரசும் ஆசிய வளர்ச்சி வங்கியும் ரூ.1,040 கோடி கடன் ஒப்பந்தத்தில் இன்று கையெழுத்திட்டன.

தமிழ்நாடு நகர்ப்புற முதலீட்டு திட்டத்திற்கான மூன்றாவது தொகுப்பு கடன் ஒப்பந்தத்தில் மத்திய நிதியமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறை கூடுதல் செயலாளர் ரஜித் குமார் மிஸ்ரா இந்தியா சார்பிலும், ஆசிய வளர்ச்சி வங்கி சார்பில் இவ்வங்கியின் இந்திய அலுவலகப் பொறுப்பு அதிகாரி ஹ்யூன் யோங்கும் கையெழுத்திட்டனர்.

தமிழ்நாட்டில் தொழில்துறை முக்கியத்துவம் வாய்ந்த 10 நகரங்களில் குடிநீர் விநியோகம், கழிவுநீர் அகற்றுதல் ஆகியவற்றின் கட்டமைப்புக்காக 2018ல் ஆசிய வளர்ச்சி வங்கியால் 500 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான பல தொகுப்பு நிதி வசதிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதில் மூன்றாவது மற்றும் கடைசி தொகுப்பாக இந்த ஒப்பந்தம் கையழுத்தாகியுள்ளது. இந்தத் தொகுப்பில் கோயம்புத்தூர், மதுரை, தூத்துக்குடி ஆகிய நகரங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த ஒப்பந்தம் கையெழுத்தான பின் இது பற்றி விவரித்த மிஸ்ரா, ” தமிழ்நாட்டின் தொழில்துறை மையங்களாகவும் விளங்குகின்ற திட்ட இலக்கு பகுதிகளில் வெள்ள நிலைக்கு எதிரான உறுதித்தன்மையை மேம்படுத்தவும் அடிப்படையான குடிநீர் மற்றும் துப்புரவு சேவைகள் அனைவருக்கும் கிடைப்பதை உறுதி செய்யவும் ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதி உதவும் என்றார்.

ஆசிய வளர்ச்சி வங்கி அதிகாரி திரு இயோங் கூறுகையில், இந்தத் திட்டத்தின் மூலம் கட்டமைத்தல், இயக்குதல் நடைமுறை, பெருமளவு தண்ணீரை பயன்படுத்துவதற்கான தானியங்கி மீட்டர்கள், கட்டுப்பாட்டு அறை மூலம் நிகழ்நேர கண்காணிப்பு, தரவுகள் பெறும் நடைமுறை ஆகியவற்றை செயல்படுத்தி இம்மாநிலத்தில் நகர்ப்புற சேவைகளை மேம்படுத்துவதற்கு ஆசிய வளர்ச்சி வங்கி தொடர்ச்சியாக உதவி செய்து வருகிறது என்றார்.

ஆசிய வளர்ச்சி வங்கியின் நகர்ப்புற முதலீடுகள் தமிழ்நாட்டின் தொழில்துறை வளர்ச்சிக்கு உதவுவதோடு இணைந்தது” என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த நிதி உதவி மூலம் கோயம்புத்தூரில் 59 கிலோமீட்டர் தூரத்திற்கு கழிவுநீர் சேகரிப்புக் குழாய்களுடன் பம்ப்பிங் மற்றும் மேலேற்று நிலையங்கள் அமைக்கப்படும். கழிவுநீர் வெளியேற்றும் இடத்திற்கு கொண்டு செல்ல 14 கிலோமீட்டர் தூரத்திற்குக் கழிவுநீர் குழாய்கள் அமைக்கப்படும்.

தூத்துக்குடியில் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான மழை நீர் வடிகால் முறைகள் அமைக்கப்படும். வருவாய் இல்லாத குடிநீர் விநியோகத்தைக் குறைக்கும் வகையில் மீட்டர் பொருத்தப்பட்ட புதிய 115 குடியிருப்புப் பகுதிகளில் 1,63,958 வீடுகளுக்குக் குழாய் இணைப்பு மூலம் குடிநீர் வழங்குவதற்காக 813 கிலோ மீட்டர் தூரத்திற்குக் குழாய்கள் அமைப்பதற்கான திட்டத்திற்கு இது உதவும்.

கழிவுநீர் சேகரிப்பு முறை, தண்ணீர் சேமிப்பு, சுகாதாரம், துப்புரவு மற்றும் சுகாதாரம், தூய்மை ஆகியவை ஆகியவற்றின் பயன்கள் குறித்து விளக்குவதற்காக கோயம்புத்தூரிலும் மதுரையிலும் அனைத்து மகளிர் சுய உதவி குழுக்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version