- Ads -
Home சற்றுமுன் திருத்தங்கல் நின்ற நாராயண பெருமாள் கோயிலில் ஆனி பிரமோத்ஸவ கொடியேற்றம்!

திருத்தங்கல் நின்ற நாராயண பெருமாள் கோயிலில் ஆனி பிரமோத்ஸவ கொடியேற்றம்!

ஆனி பிரம்மோற்சவம் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆனி தேரோட்டம் நிகழ்ச்சி வரும் 25ம் தேதி (செவ்வாய் கிழமை) காலை நடைபெறுகிறது.

thiruthangal nindranarayana perumal brammotsav

108 திவ்ய தேசங்களில் விருதுநகர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருத்தங்கல், ஸ்ரீநின்ற நாராயணப்பெருமாள் கோவில் ஆனி பிரம்மோற்சவம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பல்வேறு நேர்ச்சை செலுத்தி வழிபாடு நடத்தினர்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல்லில், இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான, பிரசித்தி பெற்ற வைணவ கோவிலான ஸ்ரீநின்ற நாராயணப்பெருமாள் கோவில் உள்ளது. 108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருத்தங்கல் ஸ்ரீநின்ற நாராயணப்பெருமாள் கோவிலில் ஸ்ரீநின்ற நாராயணப் பெருமாள் – ஸ்ரீசெங்கமலத் தாயார் எழுந்தருளி அருள் புரிகின்றனர்.

இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆனி பிரம்மோற்சவம் திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான ஆனி பிரம்மோற்சவம் திருவிழா 17ம் தேதி (திங்கள் கிழமை) காலை, கருட கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

பிரம்மோற்சவம் திருவிழாவை முன்னிட்டு தினமும் இரவு, ஸ்ரீநின்ற நாராயணப்பெருமாள் – ஸ்ரீசெங்கமலத் தாயார் சுவாமிகள் சூரிய பிரபை, சந்திர பிரபை, சிம்மம், சேஷம், கருடன், அன்னம் வாகனங்களில் எழுந்தருளி நான்கு ரத வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி தருவார்கள்.

ஆனி பிரம்மோற்சவம் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆனி தேரோட்டம் நிகழ்ச்சி வரும் 25ம் தேதி (செவ்வாய் கிழமை) காலை நடைபெறுகிறது. திருவிழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், கோவில் நிர்வாகிகள் மற்றும் நிகழ்ச்சி உபயதாரர்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version