- Ads -
Home சற்றுமுன் ஆசிரியர்களின் வருமான வரி குறைக்கப்பட வேண்டும்: அயோத்தி கூட்டத்தில் தேசிய ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்!

ஆசிரியர்களின் வருமான வரி குறைக்கப்பட வேண்டும்: அயோத்தி கூட்டத்தில் தேசிய ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்!

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் தேசிய ஆசிரியர் சங்கம் (தமிழ்நாடு) இணைந்துள்ள அகில பாரதீய ராஷ்டிரிய சைக்ஷிக் மஹா சங்கம்(ABRSM) தேசிய செயற்குழுக் கூட்டம் ஜூன் 15,16,17 ஆகிய மூன்று நாட்கள் நடைபெற்றது.

desiya asiriyar sangam kandasamy in meeting

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் தேசிய ஆசிரியர் சங்கம் (தமிழ்நாடு) இணைந்துள்ள அகில பாரதீய ராஷ்டிரிய சைக்ஷிக் மஹா சங்கம்(ABRSM) தேசிய செயற்குழுக் கூட்டம் ஜூன் 15,16,17 ஆகிய மூன்று நாட்கள் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தேசிய ஆசிரியர் சங்கம் – தமிழ்நாடு சார்பில் மாநிலத் தலைவர் திரிலோகசந்திரன், பொதுச் செயலாளர் மு‌‌.கந்தசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

நாடு முழுவதும் இருந்து அனைத்து மாநிலங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு, கடந்த கால செயல்பாடுகள்,
வருங்கால நிகழ்வுகள் குறித்து விவாதித்தனர் .

இந்தக் கூட்டத்தில், தேசிய ஆசிரியர் சங்கம் – தமிழ்நாடு
சார்பில், அதன் பொதுச்செயலாளர் மு.கந்தசாமி கலந்து கொண்டு பேசிய போது, ஆசிரியர் மற்றும் மாணவர் நலம் சார்ந்த கீழ்க்காணும் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

அகில பாரதீய ராஷ்ட்ரீய சைக்ஷிக் மஹாசங்கம் – ABRSM தேசிய செயற்குழுக் கூட்டத்தில், தேசிய ஆசிரியர் சங்கம்- தமிழ்நாடு வலியுறுத்திய கோரிக்கைகள்:

1) நாடு முழுவதும் தேசிய / பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் கைவிடப்பட்டு கடைசி ஊதியத்தில் 50% கிடைக்கும் பழைய ஓய்வூதியம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்

2) ஆசிரியர் மாணவர் விகிதம் 1:25 என உள்ளவாறு அனைத்து நிலை ஆசிரியர் காலிப்பணியிடங்களும் முறையான நியமனமாக கால முறை ஊதியத்தில் மட்டுமே செய்யப்பட வேண்டும். (தரமான சமமான கல்வித்தரம் உறுதி செய்திட).

3) ஆசிரியர்கள் ஆண்டுதோறும் வருமான வரியாக, பெரும் தொகை செலுத்தி வருவது மிக அதிருப்தி அளிக்கிறது. ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு, வருமான வரி விகிதங்கள் குறைக்கப்பட வேண்டும் அல்லது தனி வருமான வரி விகித அட்டவணை வழங்கப்பட வேண்டும்.

4) அனைத்து நடுநிலை உயர்நிலைப் பள்ளிகளிலும் NCC அமைப்பு செயல்பட வேண்டும்.

5) NMMS தேர்வில் வெற்றி பெற்று பரிசுத்தொகை பெறும் பயனாளிகளின் எண்ணிக்கையும் பரிசுத்தொகையும் இரு மடங்காக அதிகரிக்கப்பட வேண்டும்.

6)1-8. வகுப்பு போதிக்கும் அனைத்து வகை ஆசிரியர்களும் பதவி உயர்வு பெறுவதற்கு ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) தேர்ச்சி பெற வேண்டும் என்ற வகையில் விவாதப் பொருளாகி உள்ள NCTE NOTIFICATION RTE சட்டம் நிறைவேற்றப்பட்ட 23-8-2010 க்கு முன் பணியேற்ற ஆசிரியர்களுக்கு பொருந்தாது என்ற அறிவிப்பாணை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

7) 23-8-2010 இல் RTE சட்டம் நிறைவேற்றப்பட்டாலும் தமிழ்நாட்டில் ஆசிரியர் பணி நியமனத்திற்கு TET தேர்வு கட்டாயம் என 16-11- 2012 இல் தான் முறையான அறிவிப்பு வழங்கப்பட்டதை கருத்தில் கொண்டு இடைப்பட்ட காலத்தில் பணி நியமனம் பெற்ற அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கும் சிறுபான்மை பள்ளி ஆசிரியர்களுக்கும் தவிர்ப்பாணை வழங்கப்பட்டது போலும், கேரளா, கர்நாடகா, மகாராஷ்ட்ரா, உத்தரப்பிரதேச மாநிலங்களில் 2013 வரை நியமிக்கப்பட்டவர்களை பணி வரன்முறை படுத்தியது போல தமிழ்நாட்டில் பணிபுரியும் சிறுபான்மையற்ற ஆசிரியர்களை பணி வரன்முறை படுத்தி 1500ஆசிரியர்கள் பணிப்பாதுகாப்பு மற்றும் உரிய ஊதியம் உள்ளிட்ட இதர சலுகைகள் பெறவும் NCTE ஐ வலியுறுத்தி தவிர்ப்பாணை பெற வேண்டும்.

8) தமிழ்நாட்டின் பிற மாநில எல்லைப்புற மாநிலங்களில் பயிலும் மாணவர்கள் கல்வி வேலைவாய்ப்புகளில் பயன்பெறும் வகையில் மும்மொழிக் கொள்கை (அவர்கள் விரும்பும் தாய்மொழி) ஏற்கப்பட வேண்டும். – ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப் பட்டன.

இந்தக் கூட்டத்தில், 1. சங்க அமைப்பை க்ளஸ்டர் CLUSTER அளவில் கொண்டு செல்வது தலையாய பணியாக இருக்க வேண்டும்,

2 NEP 2020 ஐ அனைத்து மாநிலங்களிலும் அமல்படுத்த வேண்டும்,

3. ஆசிரியர்கள் முன் மாதிரியாக நடந்து கொண்டு சமூக பிரச்னைகளை தீர்க்கப்பாடுபடுவதன் மூலம் மாணவர்களை மேற்படி பணியில் ஈடுபடுத்த முடியும் என்ற வகையில் பணியாற்ற வேண்டும்,

4. ஆசிரியர்கள் சார்ந்த பிரச்சனைகளில் தீர்வு காண மத்திய அரசை தேசிய அமைப்பும் அந்தந்த மாநில அரசுகளை மாநில அமைப்புகளும் வலியுறுத்த வேண்டும் – எனவும் தீர்மானிக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்திற்கு தேசிய துணைத் தலைவர் மகேந்திர குமார் தலைமை தாங்கினார். அமைப்புச் செயலாளர் மகேந்திர கபூர் , இணை அமைப்பு செயலாளர் லட்சுமண் பொதுச்செயலாளர் சிவானந்த சிந்தன்கரே ஆகியோர் வழிநடத்தினர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version