- Ads -

    ஒடிசா முன்னாள் முதல்வர் ஜே.பி.பட்நாயக் காலமானார்

    jb-patnaik ஒடிசா முன்னாள் முதல்வர் ஜே.பி. பட்நாயக் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 89. 3.1.1927இல் பிறந்தவர் பட்நாயக். அவர், திருப்பதியில் நடைபெற்ற ராஷ்டிரீய சம்ஸ்கிருத பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள வந்திருந்தார். அப்போது, நேற்று இரவு அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக அவர் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கபப்ட்டார். இருப்பினும், மருத்துவ சிகிச்சையை அவரது உடல் ஏற்றுகொள்ளாத நிலையில், இன்று காலை அவர் உயிரிழந்தார். பட்நாயக், 1947 ஆம் ஆண்டு உத்கல் பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருத மொழியில் பட்டம் பெற்றவர். காங்கிரஸ்காரரான பட்நயக், முதன் முதலாக 1980 ஆம் ஆண்டு ஒடிசா முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டார். 1989 ஆம் ஆண்டு வரை முதல்வர் பதவியில் இருந்தவர், 1995 ஆம் ஆண்டு மீண்டும் ஆட்சியில் அமர்ந்து 4 ஆண்டுகள் முதல்வராக பதவி வகித்தார். பின் கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் அசாம் ஆளுநராக நியமிக்கப்பட்டு 5 ஆண்டு காலம் அப்பதவியில் இருந்தார். பட்நாயக் மறைவுக்கு ஒடிசா ஆளுநர் ஜமீர் மற்றும் முதல்வர் நவீன் பட்நாயக் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஒடிசா அரசு இன்று விடுமுறை அறிவித்துள்ளது. மேலும் ஒடிசாவில் ஒரு வார துக்கம் அனுஷ்டிக்கப்படுகிறது. ஜே.பி.பட்நாயக்கின் இறுதிச்சடங்குகள் புரியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    NO COMMENTS

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

    Exit mobile version