- Ads -
Home சினிமா சினி நியூஸ் 90வது பிறந்த நாள் கொண்டாடிய நகைச்சுவை சக்கரவர்த்தி சித்ராலயா கோபு!

90வது பிறந்த நாள் கொண்டாடிய நகைச்சுவை சக்கரவர்த்தி சித்ராலயா கோபு!

chitralayagopu hbd

நகைச்சுவை சக்கரவர்த்தி, சிரிப்பு செம்மல், கலைமாமணி சித்ராலயா கோபு தனது 90-வது வயதில் காலடி எடுத்து வைக்கிறார்.

கல்யாண பரிசு, காதலிக்க நேரமில்லை, கலாட்டா கல்யாணம், ஊட்டி வரை உறவு , வீட்டுக்கு வீடு, சுமதி என் சுந்தரி, நில் கவனி காதலி, தொடங்கி பாட்டி சொல்லை தட்டாதே  வரையில்  நிறைய நகைச்சுவை படங்களை அளித்திருக்கும் இவர், இயக்கிய முதல் படம், ஏவிஎம்மின் காசேதான் கடவுளடா. இவர் 1992ல், மறைந்த முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களால் கலைமாமணி விருதை பெற்றவர். உலக நாயகன் கமல் ஹாசனும், கிரேசி மோகனும் சேர்ந்து இவருக்கு நகைச்சுவை செம்மல் பட்டத்தை வழங்கினர்.

யூனிட்டி கிளப்பின் மூலம், பல வெற்றி நாடகங்களை எழுதிய இவர், வாஷிங்டனில் திருமணம் தொடரை அமெரிக்காவில் படப்பிடிப்பு நடத்தி இயக்கினார்.

இவரது பிறந்த நாளை சிறப்பிக்கும் விதமாக உலக நாயகன் கமல்ஹாசன், சிவகுமார், வெண்ணிறாடை மூர்த்தி, சித்ரா லக்‌ஷ்மணன் தயாரிப்பாளர் AVM சரவணன் உள்ளிட்ட பலர் தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளனர்.
 
திரு சித்ராலயா கோபு தற்பொழுது, தனது குடும்பத்துடன் திருவான்மியூரில் வசிக்கிறார்

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version