- Ads -
Home லைஃப் ஸ்டைல் விவோ எக்ஸ்80 ப்ரோ ஸ்மார்ட்போன்..! சிறப்பம்சங்கள்!

விவோ எக்ஸ்80 ப்ரோ ஸ்மார்ட்போன்..! சிறப்பம்சங்கள்!

#image_title
vivo

விவோ எக்ஸ்80 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்றுதான் கூறவேண்டும்.

குறிப்பாக இந்த புதிய ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் எனத் தகவல் வெளிவந்துள்ளது.

இப்போது ஆன்லைனில் கசிந்த விவோ எக்ஸ்80 ப்ரோ ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

விவோ எக்ஸ்80 ப்ரோ ஸ்மார்ட்போனில் மீடியாடெக் Dimensity 9000 சிப்செட் வசதி உள்ளதாக கூறப்படுகிறது. சுருக்கமாக
கூறவேண்டும் என்றால் இந்த சிப்செட் மிகவும் தரம் வாயந்தது.

அதேபோல் கேமிங் உள்ளிட்ட வசதிகளுக்கு இந்த ஸ்மார்ட்போன் மிக அருமையாக பயன்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

விவோ எக்ஸ்80 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 6.78-இன்ச் எல்டிபிஒ (2.0) E5 AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது.

மேலும் இந்த சாதனம் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவரும். எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

விவோ எக்ஸ்80 ப்ரோ ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ்+ 50எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 50எம்பி டெலிபோட்டோ லென்ஸ் + 48எம்பி சென்சார் என மொத்தம் நான்கு கேமரா இடம்பெறும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்பு செல்பீகளுக்கும், கால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

விவோ எக்ஸ்80 ப்ரோ ஸ்மார்ட்போனில் 66வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த சாதனம் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி/512ஜிபி உள்ளடக்க மெமரி வசதியைக் கொண்டுள்ளது.

மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

விவோ எக்ஸ்80 ப்ரோ ஸ்மார்ட்போனில் 4500 அல்லது 5000 எம்ஏஎச் பேட்டரி வசதி இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்த சாதனத்தில் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் உள்ளன. அதேபோல் இந்த சாதனம் சற்று உயர்வான விலையில் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

5ஜி, 4ஜி எல்டிஇ, டூயல் பேண்ட வைஃபை, 3.5எம்எம் ஹெட்ஃபோன் ஜாக், ப்ளூடூத் 5.1, யுஎஸ்பி-சி சார்ஜ் உள்ளிட்ட பல இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த புதியவிவோ எக்ஸ்80 ப்ரோ ஸ்மார்ட்போன்.

சமீபத்தில் இந்நிறுவனம் தரமான விவோ வி23இ 5ஜி ஸ்மார்ட்போனை இந்ததியாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் 6.44-இன்ச் டிஸ்பிளே, மீடியாடெக் Dimensity 810 சிப்செட், 8ஜிபி ரேம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version