- Ads -
Home லைஃப் ஸ்டைல் ஏழைகளின் மருந்தகம்… மக்கள் மருந்தகம்!

ஏழைகளின் மருந்தகம்… மக்கள் மருந்தகம்!

மார்ச் 7ஆம் தேதி இந்திய நாடே மக்கள் மருந்தகம் தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் நாள் இன்று. உலக அளவில் இந்தியா ஒரு புரட்சியை ஏற்படுத்திய நாள் இன்று.

bharatiya jana aushadi

மார்ச் 7ஆம் தேதி இந்திய நாடே மக்கள் மருந்தகம் தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் நாள் இன்று. உலக அளவில் இந்தியா ஒரு புரட்சியை ஏற்படுத்திய நாள் இன்று.

மக்களின் அன்றாட தேவையாக மாறி விட்ட மருந்துகளை மலிவு விலையில் வாங்க மகத்தான திட்டம் பிறந்த தினம் இன்று.

இந்தியாவில் சுமார் 8500 க்கும் மேற்பட்ட மக்கள் மருந்தகங்கள் என்ற மலிவு விலை மருந்துக் கடைகளும், தமிழகத்தில் 822 மக்கள் மருந்தகங்களும் நடைபெறுகின்றன.

ஒவ்வொரு வருடமும் மார்ச் முதல் வாரம் 1-ஆம் தேதி முதல் 7ம் தேதி வரை மக்களுக்கு மருந்துகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மத்திய அரசு மக்கள் மருந்தகம் தினத்தை மார்ச் 7 ஆம் தேதி அன்று கொண்டாடி வருகிறது.

செல்வந்தர்களுக்கு எல்லா மருந்தும் எளிதாக கிடைத்துக் கொண்டிருந்தது. அவர்களால் எந்த மருந்தையும் எந்த விலைக்கும் வாங்க முடிந்தது. ஆனால், நம் பாரத பிரதமர் அவர்கள், நம் நாட்டின் நடுத்தர வர்க்கத்தினரையும் ஏழைகளையும் பற்றித்தான் மிகவும் கவலைப்பட்டார். அவர்களுக்கெல்லாம் குறைவான விலையில் தரமான மருந்துகள் கிடைக்க வேண்டும் என்று அவர் சிந்தித்தது இன்று உலகமே பார்த்து வியக்கும் சாதனை திட்டமாக விரிவடைந்திருக்கிறது.

மகாகவி பாரதியார் அவர்கள் தனி ஒருவனுக்கு உணவு இல்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்று பாடிய பாரதியின் வழியில் பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களும் மனிதனுக்கு மருந்து கிடைக்கவில்லை எனில் மலிவு விலை மருந்தகம் திறந்து விடுவோம் என்று பிரதான் மந்திரி பாரதிய ஜன்ஓஷதிய பரியோஜனா என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இது சாதாரண திட்டம் அல்ல. உலகின் வல்லமை படைத்த மருத்துவ நிறுவனங்கள் இந்தத் திட்டத்தை வரவேற்கவில்லை. இந்தியா போன்ற மக்கள் தொகை மிகுந்த நாடுகளில் மிக அதிகமான லாபத்தை ஈட்டிக் கொண்டிருந்த அந்த நிறுவனங்கள் இந்தத் திட்டங்கள் வெற்றி பெற்றால் அவர்களின் லாபங்கள் பாதிக்கப்படும் என்று அஞ்சினார்கள். இது பற்றியெல்லாம் கவலைப்படாமல் மக்கள் நலனை மட்டும் கருத்தில் கொண்டு வெளிச் சந்தையில் விற்கும் மருந்துகளை அதன் விலையில் 50 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை குறைவாக மக்கள் மருந்தகங்களில் விற்பனை செய்கிறார்கள்.

ஒரு குடும்பமும் ஆயிரக்கணக்கில் இதனால் மருந்து செலவில் மிச்சம் பிடிக்க முடிகிறது. சேமிக்க முடிகிறது. Money that is saved is equal to the money that is earned. என்ற பழமொழியை மெய்ப்பிக்கும் வகையில் இந்த மக்களுக்கு மருத்துவச் செலவில் மிகப்பெரிய அனுகூலத்தை ஏற்படுத்தியுள்ளது. ரத்த அழுத்தம் இருதயம் சம்பந்தப்பட்ட பல தீவிரமான நோய்களுக்கும் ஆயிரக்கணக்கான மருந்துகள் இந்த மருந்தகங்களில் விற்பனை செய்யப்படுகின்றன.

ஏறத்தாழ 1451 மருந்து வகைகள் இங்கே கிடைக்கின்றன. இரு நூற்று நாற்பத்தி ஒரு மருத்துவ உபகரணங்களும் இங்கே கிடைக்கின்றன. வலி நிவாரணத்திற்கு ஸ்பிரே, உடல் நலத்திற்கான பானங்கள், மற்றும் அனைத்து வகையான ஜெனரிக் மெடிசன் எனப்படும் மரபு சார்ந்த மருந்து வகைகள், விற்பனைக்கு உள்ளன.

நடப்பாண்டில் மட்டும் கிட்டத்தட்ட 800 கோடி ரூபாய்க்கும் மேல் இதுவரை மருந்து வர்த்தகம் இந்த மக்கள் மருந்தகங்கள் மூலம் நடைபெற்றுள்ளது. மருந்து பொருட்கள் மற்றும் இன்றி மருத்துவ உபகரணங்கள் ஆகிய பொருட்களை வாங்கியதில் மட்டும் ஏறத்தாழ 4000 கோடி ரூபாய் சேமித்து உள்ளனர்.

இந்தத் திட்டம் தொடங்கிய நாள் முதல் இதுவரை மக்களுக்கு சேமிப்பு குறியீடு 50 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் என்று அளவிடப்பட்டுள்ளது. தமிழக மக்களை ‘ம­க்கள் மருந்தகங்களை’ பயன்படுத்திக் கொள்ளவும், தகுதியுள்ளவர்கள் ‘மக்கள் மருந்தகங்களை’ தொடங்கி நடத்தவும் நான் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

மக்கள் நலனை, மக்களின் தேவைகளை, மக்களின் எதிர்பார்ப்புக்களை, ஆழமாக சிந்தித்து, அதை நடத்திக் காட்டிக் கொண்டிருக்கும், நம் பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களுக்கு, தமிழக மக்களின் சார்பில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

  • கே. அண்ணாமலை
    (மாநிலத் தலைவர், பாஜக., தமிழகம்)

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version