- Ads -
Home லைஃப் ஸ்டைல் உங்க வைஃபை ஸ்லோவா இருக்கா..? பாஃஸ்டா இருக்க இப்படி பண்ணுங்க..!

உங்க வைஃபை ஸ்லோவா இருக்கா..? பாஃஸ்டா இருக்க இப்படி பண்ணுங்க..!

wifi

நெட் இல்லாத ஸ்மார்ட்போன் யூஸே இல்லாத ஒன்றாகிவிட்டது. பங்குச்சந்தை, சோஷியல் மீடியா, பணப்பரிவர்த்தனை என பல்வேறு பயன்பாடுகளை கொண்டிருக்கிறது ஸ்மார்ட்போன்.

பயனர்களின் தேவையை அறிந்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் பல்வேறு ப்ளானில் நெட் கொடுக்கிறது. அதுமட்டுமின்றி அதிக நெட் தேவைப்படுபவர்கள் வீட்டிலேயே வைஃபை வைத்துக்கொண்டும் பயன்படுத்துவார்கள்.

வீட்டில் மட்டுமின்றி பல்வேறு பொது இடங்களிலும் தற்போது வைஃபை பயன்படுத்தப்படுகிறது.

வைஃபையின் வேகம் அந்தந்த நிறுவனங்களை பொருத்தது என்றாலும், சில சின்ன சின்ன கவனக்குறைவும் வைஃபை வேகத்தை குறைக்கும். உங்கள் வைஃபை ஸ்பீடாக இருக்க சில டிப்ஸ்கள் உள்ளன.

செல்போனில் எந்த பிரச்னைக்கும் முதல் தீர்வு ரீ ஸ்டார்ட்தான். தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்கும் செல்போன் என்னும் மெஷுனுக்கு ரெஸ்ட் கொடுத்து மீண்டும் ப்ரஷாக தொடங்க உதவுதான் ரீ ஸ்டார்ட். அதனால் உங்கள் வைஃபை ஏதேனும் சிக்கல் ஏற்படுத்தினால் உங்கள் செல்போனை ரீ ஸ்டார்ட் செய்யுங்கள்.

ரீஸ்டார்ட் என்றதும் உடனடியாக ஆன் செய்யாமல் குறிப்பிட்ட சில மணி நேரங்கள் ஓய்வு கொடுக்கலாம். இரவில் ஸ்விட்ச் ஆப் செய்துவிட்டு காலையில் ஆன் செய்யலாம். இதனால் செல்போனில் வைஃபை வேகம் அதிகரிக்கும்.

சிலரது வீட்டில் வைஃபை 24 மணி நேரமும் ஓடிக்கொண்டே இருக்கும். எப்போதும் தேவை என்றாலும் அதுவும் ஒரு மெஷின் தான். அதனால் அடிக்கடி வைஃபைக்கு ரெஸ்ட் கொடுக்க வேண்டும்.

பலர் தூங்கும்போதும் நெட் பயன்படுத்துவதால் வைஃபையை ஆப் செய்ய சோம்பேறித்தனத்தால் அப்படியே தூங்கிவிடுவார்கள். அதனால் 24 மணி நேரமும் வைஃபை ஆன் செய்தே இருக்கும். வைஃபை வேகம் குறைய இதுவும் ஒரு சிக்கல்தான். எனவே அடிக்கடி வைஃபைக்கு ரெஸ்ட் கொடுக்க பழகுங்கள்..

வைஃபை ரவுட்டர்களை தனியாக வைப்பது நல்லது. சில வீடுகளில் பல்வேறு ஒயர்கள் கூடிக்கிடக்கும் இடத்தில் பத்தோடு பதினொன்றாக வைஃபை ரவுட்டரும் இருக்கும்.

மின்சாதன பொருட்கள் சிக்னலை கவரும் என்பதால் சிக்னல் குறைபாடுகளுக்கும் வழிவகுக்கும். எனவே தனி இடம் என்றால் சிக்கல் இருக்காது.

வைஃபை வைக்கும்போது செல்போனில் இணைக்கப்பட்டிருக்கும் வைஃபை பல வருடங்களாக சிலர் பயன்படுத்துவார்கள். ஆனால் வைஃபை அடிக்கடி ​Forget கொடுத்து மீண்டும் இணைக்க வேண்டும். அடிக்கடி பாஸ்வேர்ட் மாற்றுவதும் மிக நல்லது. உங்கள் செல்போனில் வைஃபை வேகத்தை அதிகரிக்கும்.

செல்போனுக்கு பாதுகாப்பு தேவைதான். ஆனால் சிலர் கடுமையான கவர்களை போட்டு ஒரு பெட்டிக்குள் வைப்பதைப்போல செல்போனை வைத்திருப்பார்கள். அதிக பாதுகாப்பும் வைஃபை சிக்னலை உள்ளே விடாமல் தடுக்கும்.

இந்த காரணத்தாலும் வைஃபை சிக்னலில் சிக்கல் ஏற்படலாம். அதனால் உங்கள் செல்போன் மூச்சு விடும் அளவுக்கு இலகுவான கவர்களை பயன்படுத்துங்கள்.

வைஃபை இணைப்புக்கு செல்போனும் வைஃபை ரவுட்டரும் முக்கியம் என்பதால் இரண்டுமே அப்டேட்டாக இருக்க வேண்டும். வைஃபை இணைப்பை பாதிக்காத வண்ணம் லேட்டஸ்ட் அப்டேட்டை பெற்றிருக்க வேண்டும்.

உங்கள் வைஃபை ரவுட்டர் மிகவும் பழையது என்றாலோ லேட்டஸ்ட் வெர்ஷன் இல்லை என்றாலோ உடனடியாக குறிப்பிட்ட நிறுவனத்தை தொடர்புகொண்டு புது வைஃபை ரவுட்டரை பெறலாம். அதேபோல வைஃபைக்கான வயரையும் புதிதாக மாற்றலாம்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version