- Ads -
Home லைஃப் ஸ்டைல் மோட்டோ ஜி52: சிறப்பம்சங்கள்..!

மோட்டோ ஜி52: சிறப்பம்சங்கள்..!

Moto G52

மோட்டோ ஜி52 செல்போன் இந்தியாவில் இன்று முதல் விற்பனைக்கு வந்துள்ள நிலையில், இது வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அமெரிக்காவை தலைமையகமாக கொண்ட நிறுவனமான மோட்டோரோலா, எலக்ரானிக் பொருட்களை விற்பனை செய்யும் மிகப்பெரிய நிறுவனமாகும்.

இந்நிறுவனம் மோட்டோ என்ற பெயரில் செல்போன்களை விற்பனை செய்து வருகிறது. உலக அளவில் செல்போன்களுக்கு பெரிய சந்தையை கொண்டுள்ள மோட்டோ இந்தியாவிலும் ஏராளமான வாடிக்கையாளர்களை தன்வசப்படுத்தியுள்ளது.

இதுவரை ஏராளமான மாடல்கள் வந்துள்ள நிலையில், இந்நிறுவனம் கடந்த வாரம் மோட்டோ ஜி52 மாடல் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்நிலையில் இந்த செல்போன் இன்று நண்பகல் 12 மணி முதல் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது. இந்த செல்போன் இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்ட்டில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இரண்டு வேரியண்டுகளில் இந்த மாடல் விற்பனைக்கு வந்துள்ள நிலையில், 4GB RAM 64GB ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்டின் விலை 14,499 ரூபாய் ஆகும். இதேபோல் 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்டின் விலை 16,499 ஆகும்.

இந்த போனின் தடிமன் 7.88 மிமீ மற்றும் அதன் எடை 169 கிராம் ஆகும். தொலைபேசியின் அளவு 160.98×74.46×7.99மிமீ ஆகும். இது கருப்பு மற்றும் வெள்ளை ஆகிய இரண்டு நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

6.6-இன்ச் முழு எச்டி+ pOLED பஞ்ச் ஹோல் டாட் தொடுதிரையை கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் இயக்கப்படுகிறது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 செயலி கொடுக்கப்பட்டுள்ளது.

4ஜிபி ரேம் மற்றும் 128 ஸ்டோரேஜ் மற்றும் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்ட இரண்டு வகைகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த செல்போனில் மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் ஒரு TB வரை சேமிப்பகத்தை அதிகரிக்கலாம்.

இந்த செல்போனில் மூன்று கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளது. 50எம்பி மெகாபிக்சல் கேமரா, 8எம்பி மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ், 2எம்பி மெகாபிக்சல் மேக்ரோ கேமரா ஆகியவை பின்பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

இதேபோல் 16 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த போனின் பக்கவாட்டில் கைரேகை சென்சார் பொருத்தப்பட்டுள்ளது. இந்த 5000எம்ஏஎச் பேட்டரி திறன் கொண்ட இந்த ஸ்மார்ட்போனில் 30வாட் வேகமாக சார்ஜ் ஏறும் வசதி உள்ளது.

இந்த செல்போன் இந்தியாவின் மிக மெல்லிய மற்றும் இலகுவான செல்போனாக இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version