- Ads -
Home லைஃப் ஸ்டைல் இன்ஸ்ட் ரா ஸ்டோரியில் புதிய வசதி..!

இன்ஸ்ட் ரா ஸ்டோரியில் புதிய வசதி..!

Instagram

இன்ஸ்டாகிராம் பயனாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. புகைப்படங்கள், ரீல்ஸ் என பயனாளர்கள் தங்களை எப்போதும் பிஸியாக வைத்திருக்கின்றனர்.

குறிப்பாக, அன்றைய தினத்தில் நாம் செல்லும் இடங்கள்,சாப்பிடும் உணவுகள், பார்க்கும் படங்கள் போன்றவற்றை இன்ஸ்டாவில் ஸ்டாரியாக பதிவிட்டு, நண்பர்களுக்கு தெரிவிப்பது வழக்கம்.

ஆனால், இந்த வசதியில் சிலர் ட்ரெயின் விடுவதும் வாடிக்கையாக உள்ளது. மொபைலில் கிளிக் செய்த 10 போட்டோவையும் ஸ்டாரியில் பதிவிடும் பயனாளர்களுக்காக, புதிதாக Show all வசதியை இன்ஸ்டாகிராம் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

புதிய வசதியின் கீழ், பயனாளர் ஒருவர் அதிகமாக ஸ்டோரி பதிவிடுகையில், முதலில் பதிவிட்ட 3 ஸ்டோரிகள் மட்டுமே அவர்களது ஃபாலோயர் கணக்கில் தோன்றும். மீதமுள்ள ஸ்டோரி மறைக்கப்பட்டிருக்கும். அதை பார்க்க விரும்புவோர், திரையில் காணப்படும் ‘Show all’ பட்டனை கிளிக் செய்ய வேண்டும். இல்லையெனில், தானாக மூன்று ஸ்டோரிக்கு பிறகு, அடுத்த பயனாளரின் ஸ்டோரிக்கு ஜம்ப் ஆகிவிடும்.

இந்த புதிய வசதியை, பிரேசில் வாசி Phil Ricelle என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்த வசதி தற்போதைக்கு, ஒரு சில பிரேசில் பயனாளர்களுக்கு சோதனை முறையில் வழங்கப்பட்டுள்ளது. இந்த வசதிக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் பட்சத்தில், இந்தியா உட்பட அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது.

இந்த வசதி அமலுக்கு வரும் பட்சத்தில், பயனாளர்கள் பதிவிடும் முதல் மூன்று ஸ்டாரிகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அவை ஆர்வர்த்தை துண்டினால் மட்டுமே அடுத்த ஸ்டோரிகளை காண Show all பட்டன் கிளிக் செய்யப்படும்.

தற்போதைக்கு, இன்ஸ்டாகிராமில் பயனாளர் ஒருவர் 100 ஸ்டோரி வரை பதிவிட முடியும். புதிய Show all வசதி வந்தாலும், ஸ்டோரி பதிவிடும் அதிகப்பட்ச எண்ணிக்கையில் மாற்றம் வராது என தெரிகிறது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version