- Ads -
Home இந்தியா சான்ஸே இல்ல…! சசிகலா முன்னதாகவே வெளியில் வர..! அடித்துக் கூறும் ஆபீசர்!

சான்ஸே இல்ல…! சசிகலா முன்னதாகவே வெளியில் வர..! அடித்துக் கூறும் ஆபீசர்!

DIG Rupa SASIKALA

சான்ஸே இல்ல… சசிகலா முன்னதாகவே சிறையில் இருந்து வெளியில் வர.. சான்ஸே இல்லை.. என்று அடித்துக் கூறுகிறார் முன்னாள் சிறைத்துறை ஆபீசர் ரூபா.

இதை அடுத்து, ஒற்றைத் தலைமையை எதிர்பார்த்த சசிகலாவுக்கு ஒற்றைத் தலைவலி கிடைத்துள்ளதாக, சமூக வலைத்தளங்களில் கலாய்த்துவருகின்றனர்.

பெங்களூரூ பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலா, முன்கூட்டியே விடுதலை ஆவார் என தகவல்கள் வெளியாயின. இந்நிலையில் இது குறித்து சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்துள்ள சிறைத்துறை முன்னாள் டி.ஐ.ஜி ரூபா, நல்லெண்ண அடிப்படையில் சிறைக்கைதிகளை விடுவிப்பதற்கு பல்வேறு விதிகள் உள்ளது. ஆனால் இந்த வழக்கை பொறுத்தவரை, அந்த விதிகளுக்குள் இது வராது. எனவே, முன் கூட்டியே சசிகலா விடுதலை என்பது குறித்த கேள்வியே எழவில்லை என்று ரூபா கூறியுள்ளார்.


எனவே நன்னடத்தை விதிகளின் கீழ் முன்கூட்டியே சசிகலா விடுதலையாக வாய்ப்பே இல்லை என்கிறனர் கர்நாடக காவல்துறை அதிகாரிகள். நன்னடத்தை விதிகளின் முன்பே விடுதலை செய்ய அந்த வழக்கின் தன்மையையும் பார்க்கப்படும்.

எனவே சசிகலா 4 ஆண்டுகளும் சிறைத்தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும் என கர்நாடக சிறைத்துறை வட்டாரத்தினர் உறுதிபடக் கூறுகின்றனர்.

அதே நேரம் ரூபா விளம்பரத்துக்காகவும் மார்க்கெடிங் உத்திக்காகவும் இவ்வாறு கூறுகிறார் என்று டிவிட்டரில் ஒருவர் கமெண்ட் அடிக்க, இது முட்டாள்தனமானது என்று கருத்துப் பதிவிட்டுள்ள ரூபா, எனது முந்தைய டிவிட்டில், என்ன விதியோ அதை மட்டுமே தெரிவித்துள்ளேன். எனக்கும் மார்க்கெட்டுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டுள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version