- Ads -
Home உரத்த சிந்தனை சர்வதேச பயங்கரவாதத்துக்கு தமிழக தென்மாவட்டங்கள் இரையாவது துரதிருஷ்டம்!

சர்வதேச பயங்கரவாதத்துக்கு தமிழக தென்மாவட்டங்கள் இரையாவது துரதிருஷ்டம்!

nia

அரபு நாடுகளில் இந்தியாவுக்கு எதிரான இயக்கம் நடத்தலாம் ,அதுவும் இஸ்லாமிய நாடுகளில் இந்தியாவுக்கு எதிரான காரியங்களை செய்யலாம் என திட்டமிட்ட தேசவிரோதிகளுக்கு சவுக்கடி கிடைத்திருக்கின்றது

துபாயில் கூடியிருகின்றனர் அந்த கும்பல், இங்கிருந்து வேலை செய்து பிழைக்க சென்றவர்கள் அவர்கள் பெரும்பாலும் தென் தமிழகத்தினர். ஆனால் மத இறுக்கத்தில் ஒன்று கூடி ஒரு மாதிரியான அமைப்பாக சென்று கொண்டிருந்திருகின்றார்கள்!

தாங்கள் இஸ்லாமிய நாடுதான்; ஆனால் இன்னொரு நாட்டிற்கு எதிரான தீவிரவாதத்தை எந்நிலையிலும் அனுமதிக்கமுடியாது; அது சர்வதேச அரங்கில் தங்கள் நன்மதிப்பினை கெடுத்துவிடும் என அஞ்சிய துபாய் அந்த 14 பேரையும் பிடித்து இந்தியாவிடம் கொடுத்துவிட்டது.

இது இஸ்லாமிய நாடு அல்லவா? மோடி ஆளும் இந்துத்வ இந்தியாவிடம் போராளிகளை ஒப்படைப்பதா என்றெல்லாம் அவர்கள் யோசிக்கவில்லை! சர்வதேச அரங்கில் மோடிக்கு நல்லபெயர் இருப்பதால் தயக்கமின்றி கொடுத்துவிட்டார்கள்.

இந்தியாவும் முன்பு போல் அல்ல, நல்ல அயலக உறவுகள், துல்லியமான உளவு தகவல், சதிகாரர்களை தலையில் சாக்கு போட்டு தூக்குதல் என அசத்துகின்றது!

இந்தியா சொன்னபடி கேட்டிருந்தால் இலங்கை தாக்குதலே நடந்திருக்காது! மிக அணுக்கமாக சதிகாரர்களை பின் தொடர்ந்த புலனாய்வு பிரிவு 14 பேரை தூக்கி வந்துவிட்டது!  விசாரணை தீவிரமாக நடக்கின்றது!

இதுபற்றி எந்த ஊடகமும் வாய்திறக்காது, எந்த தலைவனும் பேசமாட்டான் அவனின் டிவியோ பத்திரிகையோ பேசாது! எல்லாம் வாக்கு அரசியல், மைனாரிட்டி வாக்கு போய்விடுமாம்!

அரசியல் கட்சிகள் அப்படித்தான் , எல்லாம் திருட்டு அரசியல், வாக்குக்காக அமைதி காக்கும் அயோக்கியதனம்! 14 பேரில் பெரும்பாலோனோர் தென் மாவட்டம் என்பதும் ஒருவன் நெல்லையினை சேர்ந்தவன் என்பதுமே மாபெரும் அதிர்ச்சி!

ஏதோ ஒரு சக்தி தென்மாவட்டங்களை குறிவைக்கின்றது, அப்பாவி இளைஞர்களை மூளைசலவை செய்கின்றது! ஏதும் அசம்பாவிதம் நடக்கும் முன் தென்னகம் விழித்துகொள்ள வேண்டும், எல்லோரும் தங்கள் வீட்டு இளைஞர்களை கவனித்து கொள்ளுதல் நலம்!

இல்லாவிட்டால் இந்திய புலனாய்வு குழு தன் பாணியில் கவனித்துக் கொள்ளும்! இந்திய பாதுகாப்பு அமைச்சுக்கும் , துபாய் காவல்துறைக்கும் சிறப்பான நன்றிகள்!

இந்தியாவுக்கு எதிரான சதி எந்த நாட்டில் நடந்தாலும் அதை முறியடிக்கும் அளவுக்கு தேசத்தின் சக்தி வளர்ந்திருப்பது மகா நல்ல விஷயம்!

– ஸ்டான்லி ராஜன் (Stanley Rajan)

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version