- Ads -
Home உள்ளூர் செய்திகள் பொதுப் பாதையை அடைக்க முயற்சி: குமரி கிறிஸ்துவர்கள் மீது இந்து முன்னணி புகார்!

பொதுப் பாதையை அடைக்க முயற்சி: குமரி கிறிஸ்துவர்கள் மீது இந்து முன்னணி புகார்!

kumari hindus

பொதுமக்கள் பயன்படுத்தும் பொதுப் பாதையை அடைப்பதற்கு கிறிஸ்துவர்கள் முயற்சி செய்து வருகின்றனர் என்று கூறி, அதனை தடுத்து நிறுத்த வேண்டுமென குமரி மாவட்ட இந்து முன்னணி புகார் கொடுத்துள்ளது.

மதுசூதனபுரம் வடக்கு கிராமம் சர்வே எண் 283/5 ல் பொது பாதையை பொது மக்களுக்கு இடையூறாக ஆர்ச் மற்றும் கேட் அமைப்பதை தடை செய்வது தொடர்பாக புகார் மனு அளித்துள்ளதாக, குமரி மாவட்ட இந்து முன்னணி தலைவர் மிசா சோமன் தெரிவித்தார்.

அவரது புகாரில்… கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் தாலுகாவிற்குட்பட்ட மதுசூதனபுரம் வடக்கு கிராமத்தில் பிள்ளையார்புரம் ஊரில் சுமார் 150 இந்து குடும்பங்களும் 30 கிறிஸ்தவ குடும்பங்களும் அமைதியான முறையில் வாழ்ந்து வருகின்றனர்.

பிள்ளையார்புரம் ஊரில் அருள்மிகு ஸ்ரீ தேவி முத்தாரம்மன் திருக்கோவில் 150 ஆண்டுகளுக்கு முன்பே பாரம்பரிய முறையில் வழிபாட்டு முறைகளை நடத்திவருகின்றனர். 2008ஆம் ஆண்டு ஊர் கோவில் திருவிழாவின் போது அம்மன் வாகன பவனி மதுசூதனபுரம் வடக்கு 283/5 சர்வே எண்ணில் வழியாகக் கொண்டு வரும்போது ஒரு சில சமூக விரோதிகளின் தூண்டுதலின்பேரில் காவல் துறையினர் தடியடி நடத்தி ஊர்மக்களின் பெயரிலும் இந்து இயக்க தலைவர்கள் பெயரிலும் வழக்கு பதிவு செய்யப்பட்டு வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது;

பிள்ளையார் புரம் ஊரில் 60 ஆண்டுகளாக இந்துக்களும் கிறிஸ்தவர்களும் பயன்படுத்தி வந்த பொதுப் பாதையை கிறிஸ்தவர்கள் 2009 ஆம் ஆண்டு போலி ஆவணங்களை தயார் செய்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து மேற்கண்ட பிரச்சனைக்குரிய இடத்தில் ஆர்ச் மற்றும் Gate அமைத்து பொதுப் பாதையை அடைக்க முயற்சி செய்கிறார்கள்; இந்த பாதை ஆத்திவிளை ஊராட்சிக்குட்பட்ட ஊராட்சி 2005 தீர்மானத்தின்படி கான்கிரீட் தளம் அமைக்கபட்டு பொது குடிநீர் நல்லி வைக்கப்பட்டது; மேலும் ஊராட்சி பராமரிப்பில் ஊர் பொதுமக்கள் பயன்படுத்துகின்ற பொது வழிப்பாதையாக இருந்து வருகிறது

ஊர் பொதுமக்கள் இதுகுறித்து ஏற்கனவே அனைத்து அரசுத்துறை அதிகாரிகளிடமும் புகார் மனு அளித்துள்ளார்கள்; மேலும் பிள்ளையார் புரம் ஊரில் 2008 நடந்த தடியடி ,துயர சம்பவம் மற்றும் உயிர் இழப்புகள் ஏற்பட்டது போல் இனி மேல் ஏற்பட்டு விடக்கூடாது என்பதை உங்கள் பார்வைக்கு தெரிவிக்கிறோம்.

ஆகவே உடனடியாக மதுசூதனபுரம் வடக்கு கிராமத்தில் 283/5 ல் பொதுப் பாதையை அபகரித்து ஆர்ச் மற்றும் Gate அமைக்க முயற்சிக்கும் இரு மதத்தினர் இடையே பதட்டத்தை ஏற்படுத்தும் சமூக விரோதிகள் மீது உடனடியாக கைது செய்து அமைதி நிலவ கன்னியாகுமரி மாவட்ட இந்து முன்னணி சார்பில் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்… என்று குறிப்பிட்டுள்ளார்.

குமரி மாவட்டத்தில் இந்துக்களின் அடையாளங்களை அழிப்பதிலும், இந்துக்களின் வழிபாட்டு முறைகளுக்கு உச்சபட்ச நெருக்குதலும் தடங்கல்களும் ஏற்படுத்துவதிலும் கிறிஸ்துவர்கள் திட்டமிட்டு செயல்பட்டு வருவதாக அப்பகுதி இந்து முன்னணியினர் புகார் கூறி வருகின்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version