- Ads -
Home உள்ளூர் செய்திகள் 1596… தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்கள் எண்ணிக்கை!

1596… தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்கள் எண்ணிக்கை!

corona awareness

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை கடந்தது. அதே நேரம் தமிழகத்தில் 1596ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் ஏப்.21 இன்று மேலும் 76 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை அடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1596 ஆக உயர்ந்துள்ளது. இன்று மேலும் ஒருவர் உயிரிழந்தார். இதை அடுத்து தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது.

தமிழக சுகாதாரத்துறை சார்பில் வெளியான அறிக்கையில்…

தமிழகத்தில் இன்று மேலும் 76 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிக பட்சமாக சென்னையில் 55 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. இதனால் மாநிலத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1596 ஆக அதிகரித்துள்ளது.

இன்று ஒரே நாளில் 178 பேர் குணமடைந்து ‛டிஸ்சார்ஜ்’ ஆகியுள்ளனர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 635 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதால் மொத்தம் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது. தற்போது சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 943 ஆக உள்ளது… என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கொரோனாவால் உயிரிழந்த டாக்டர் ஒருவரின் உடலை அடக்கம் செய்ய ஒரு தரப்பு எதிர்ப்பு தெரிவித்து கல்லெறியில் ஈடுபட்டு பிரச்னை ஆனதால், கொரோனாவால் இறந்தவர்களின் உடல் அடக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்போர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப் படும் என்று, சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் அறிவித்திருக்கிறார்.

சென்னை தண்டையார்ப்பேட்டையில், கொரோனா பாதித்த பகுதிகளில் ஆய்வு செய்த பின்னர் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் கூறிய போது… கொரோனாவினால், உயிரிழந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும். டாக்டரின் உடலை அடக்கம் செய்ய விடாமல் தடுத்து போராட்டம் நடத்தியது மனிதநேயமற்ற செயல். டாக்டர் உடலை அடக்கத்தை தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டதாக 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version