- Ads -
Home உள்ளூர் செய்திகள் ஆசிய விளையாட்டு போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்றவர்களுக்கு சென்னை பள்ளியில் பாராட்டு!

ஆசிய விளையாட்டு போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்றவர்களுக்கு சென்னை பள்ளியில் பாராட்டு!

silvermedalist asiangames felicitate

சென்னை: 2018 ஆசிய விளையாட்டு போட்டிகளில் வெள்ளிப்பதக்கம் வென்ற வீரர்களுக்கு முகப்பேர் வேலம்மாள் பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது.

முகப்பேர் வேலம்மாள் பள்ளியில் 2018 ஆண்டு நடைபெற்ற 18வது ஆசிய விளையாட்டு போட்டிகளில் தடகளப் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்ற வீரர்களுக்கு ரொக்கப்பரிசுடன் கூடிய பாராட்டுவிழா இன்று (08.09.2018) நடைபெற்றது.

சமீபத்தில் ஜகார்த்தாவில் நடைபெற்ற 18வது ஆசிய விளையாட்டு போட்டியில் 4×400 மீட்டர் ரிலே ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கம் வென்ற திரு. ஆரோக்கிய ராஜீவ், ஆடவருக்கான 400 மீட்டர் தடையோட்டத்தில் வெள்ளி பதக்கம் வென்ற திரு. தருண் ஐயாசாமி, நெடுந்தொலைவு ஓட்டப்பந்தய வீரரும் விருதுக்குரிய தகுதியைப் பெற்றருந்தவருமான திரு. கோவிந்தன் லக்ஷ்மணன் ஆகியோரைப் பெருமைப்படுத்தும் விதமாக முகப்பேர் வேலம்மாள் பள்ளி நிர்வாகம் தலா இரண்டு லட்சம் ரூபாயை ஊக்கத்தொகையாக வழங்கி பாராட்டியது.

பாராட்டு விழாவில் வீரர்கள் ஆரோக்கிய ராஜீவ் மற்றும் தருண் ஐயாசாமி, இருவரும் மாணவர்களின் விளையாட்டு ஆர்வத்தை தூண்டும் வகையில் உரையாற்றினர். பின்னர் மாணவர்கள் கேட்ட வினாக்களுக்கு சிறப்பான முறையில் பதிலளித்தனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version