- Ads -
Home உள்ளூர் செய்திகள் கோழிப் பண்ணை திட்டத்தின் கீழ் 862 பேர் பயன்: கரூர் ஆட்சியர் ஜெயந்தி

கோழிப் பண்ணை திட்டத்தின் கீழ் 862 பேர் பயன்: கரூர் ஆட்சியர் ஜெயந்தி

Apr 27d கரூர் மாவட்டம்,  மணல்மேடு  ஊராட்சியில் கால்நடை பராமரிப்புத் துறையின்  மூலம்  மேற்கொள்ளப்பட்டு  வரும்  திட்டப்பணிகளை  மாவட்ட ஆட்சித் தலைவர்  ஜெயந்தி  தலைமையில் செய்தியாளர் பயணம் மேற்கொள்ளப்பட்டன. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் செய்தியாளர்கள் முன்னிலையில் மணல்மேடு ஊராட்சியில் புறக்கடை கோழிவளர்ப்புத்திட்டத்தின் கீழ் பயனாளிகள் வளர்க்கப்பட்;டு வருகின்ற கோழிபண்ணைக்குச் சென்று கோழிகள் வளர்க்கப்பட்டு வருவதன் விவரம் குறித்து கேட்டறிந்ததுடன் மேலும் கால்நடைத்துறை மருத்துவர்களின் ஆலோசனைப்படி செயல்படவேண்டும் என பயனாளிகளுக்கு  மாவட்ட ஆட்சித்தலைவர்  ஜெயந்தி  தெரிவித்தார். பின்னர்  கூலி  நாயக்கனூர்  பகுதிக்குச்  சென்று  தீவன  அபிவிருத்தி  திட்டத்தின்  கீழ்  பயனாளிகள்  விவசாய  நிலங்களில்  மழைத்தூவன்  கருவி மூலம்  கால்நடைகளுக்குத்  தேவையான  தீவனப்புல்  வளர்க்கப்பட்டு  வந்ததை பார்வையிட்டதுடன்  அங்குள்ள  பயனாளிகளிடம்  மழைத்தூவன்  கருவியை அனைவரும்  பயன்படுத்தி  அதன்மூலம்  நல்ல  பயனை  பெற வேண்டும்.  இத்திட்டத்தின்  மூலம்  குறைந்த  அளவு  தண்ணீரில்  அதிக  பரப்பளவில்  கால் நடைகளுக்குத்  தேவையான  தீவனங்களை  வளர்க்க  முடியும்.  மேலும் இவ்வாறு  வளர்க்கப்படும்  தீவனப்புல்களில்  எவ்வித  நோய்களும்  தாக்காது.  அவ்வாறு  தூய்மையான  தீவனமாக  கிடைப்பதால்  அதை  கறவை மாடுகளுக்கு  பயன்படுத்தும்  போது  மாடுகள்  ஆரோக்கியமாக  இருப்பதுடன் பால்  உற்பத்தித்திறனும்  இரண்டு மடங்கு  அதிகரிக்கும்.  எனவே  கறவை மாடு  வளர்ப்போர்  கட்டாயம்  மழைத்தூவன்  இயந்திரத்தை  பயன்படுத்தி  பயன் பெற  வேண்டும்  என  மாவட்ட  ஆட்சித் தலைவர் ஜெயந்தி  தெரிவித்தார். தொடர்ந்து  செய்யப்ப கவுண்டன் புதூர்  பகுதியில்  பயனாளிகள் கறிக் கோழிப் பண்ணை  அமைக்கப்பட்டு  செயல்படுத்தி  வருவதை  பார்வையிட்டதுடன் மேலும்  கோழிப்பண்ணையை  அதிக அளவில்  விரிவுபடுத்திடும்  வகையில் பயனாளிகள்  செயல் பட வேண்டும்  என  மாவட்ட  ஆட்சித் தலைவர்  ஜெயந்தி  அறிவுறுத்தினார். மேலும்  கால்நடை பராமரிப்புத் துறையின்  மூலம்  அரசின்  திட்டங்கள் செயல்படுத்திவருவது  குறித்து  மாவட்ட  ஆட்சித் தலைவர் ஜெயந்தி செய்தியாளர்களிடம்  தெரிவிக்கையில் கரூர்  மாவட்டத்தில்  கிராமப்புறங்களில்  புறக் கடை கோழி வளர்ப்புத் திட்டத்தின்  கீழ்  440  பயனாளிகளுக்கு  ரூ.11.22  இலட்சம்  மதிப்பீட்டில் கோழி வளர்ப்பு  பண்ணை  அமைத்து  பராமரித்து  வருகிறார்கள்.  மேலும்  கறிக்கோழி மற்றும்  நாட்டுக்கோழி  பண்ணை  வளர்ப்புத் திட்டத்தின் கீழ்  இதுவரை  நான்கு ஆண்டுகளில்  ரூ.350.10  இலட்சம்  மதிப்பீட்டில்  422  பயனாளிகள்  கோழிப் பண்ணைகள்  அமைத்து  பராமரித்து  வருகிறார்கள்.  இத்திட்டத்தில்  பயனாளிகளுக்கு  அரசு  மானியம்  50 சதவிகிதம்  வழங்கப்பட்டு  வருகின்றன. இன்றைய  கால கட்டத்தில்  பொது  மக்களின்  தேவையை  உணர்ந்து  மிக  நல்ல  முறையில்  கோழி  வளர்ப்பில்  ஈடுபட்டால்  அதிக  அளவில்  விற்பனை  ஆகுவதுடன்  தேவையான  பொருளாதார  முன்னேற்றமும்  பெறலாம். அதேபோல்  கால்நடை  வளர்ப்பிலும்  போதிய  லாபம்  பெறலாம்.  கால்நடை பராமரிப்புத் துறையின்  மூலம்  மாநில  தீவன  அபிவிருத்தித் திட்டத்தின்  கீழ்  கோ-3 ,  கோ- 4 ரக  தீவன புல்  வளர்க்க  அரசு  மானியத்துடன்  இத்திட்டம்  செயல்பட்டு  வருகின்றன.  இத்திட்டத்தின்  மூலம்  மாவட்டத்தில்  ரூ.207  இலட்சம்  மதிப்பீட்டில்  1711  ஏக்கர்  நிலப்பரப்பில்  5133  பயனாளிகள்  தீவனப்புல்  வளர்த்து  வருவதுடன்  மேலும்  மருத்துவர்களின்  ஆலோசனைப் படி  மழைத் தூவன்  கருவியையும்  பயன்படுத்தி  அதிக  பரப்பளவில்  தீவனப்புல்  வளர்த்து பயன் பெற்று  வருகிறார்கள்.  மேலும்  மகாத்மா  காந்தி  தேசிய  ஊரக  வேலை  உறுதித் திட்டத்தின்  மூலமாகவும்,  ஆடு  மற்றும்  கோழி  வளர்க்க  கொட்டகைகள்  அமைக்க  நடவடிக்கை  மேற்கொள்ளப்பட்டு  இதுவரை  180  பயனாளிகளுக்கு  கொட்டகை  அமைத்துக்  கொடுக்கப் பட்டுள்ளன. இது மட்டு மின்றி  கூலித் தொழிலாளிகள்  மற்றும்  வறுமையில்  உள்ளோர்  பொருளாதார  முன்னேற்றம்  பெற  அரசு  அறிவித்த  திட்டமான  விலையில்லா  ஆடு  வழங்கும்  திட்டத்தில்  கடந்த நான்கு  ஆண்டுகளில்  9673 குடும்பங்களுக்கு  4  ஆடுகள்  வீதம்  ரூ.12.56  கோடி  மதிப்பீட்டில்  38692 விலையில்லா  ஆடுகள்  வழங்கப்பட்டு  இவைகள்  62251 குட்டிகளை  ஈன்றுள்ளன.  இதன் மூலம்  பயனாளிகளின்  பொருளாதார  முன்னேற்றம்  உயர்ந்துள்ளன.  இது போல்  கால்நடைப் பராமரிப்புத் துறையின்  மூலம்  பல்வேறு  திட்டங்கள்  செயல்படுத்தி  வருவது  மட்டுமின்றி  கால்நடைகளுக்குத்  தேவையான  சிகிச்சைகளும்  வழங்கப்பட்டு  வருவதுடன்  அதிக அளவு  மருத்துவ  முகாம்  அமைக்கப்பட்டு  அதன்  மூலமாகவும்  கால் நடைகள்  நன்றாக  பராமரிக்கப்பட்டு  வருகின்றன.  எனவே  விவசாயிகள் மற்றும்  பொதுமக்கள்  கால்நடை பராமரிப்புத் துறை  அலுவலர்களின்  ஆலோசனையைப் பெற்று  இணைப்புத் தொழிலாக  கறவைமாடு,  ஆடு,  கோழி  ஆகியவற்றை  அதிக  அளவில்  வளர்த்து  பண்ணைகளாக  உருவாக்கி  அதிக  அளவில்  உற்பத்தி  திறனை  அதிகரித்து  பொருளாதார  முன்னேற்றம் பெறுவதுடன்  பலருக்கு  வேலை வாய்ப்புகளையும்  வழங்கிட  வேண்டும்  என மாவட்ட  ஆட்சித்தலைவர் ச.ஜெயந்தி  தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில்  கால்நடை பராமரிப்புத் துறை  இணை  இயக்குநர் மரு.இராமநாதன், உதவி இயக்குநர் மரு.குழந்தைச்சாமி,  கால்நடை பராமரிப்புத்துறை மருத்துவர்கள்  மரு.முரளிதரன், பிரதீபா, கோபிநாத்  மற்றும் அரசு  அலுவலர்கள்  உட்பட  பலர்  கலந்து  கொண்டனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version