- Ads -
Home சினிமா சினி நியூஸ் கிளை பெருக்கிய சூரியின் உணவகம்! திறந்து வைத்தார் சிவகார்த்திகேயன்!

கிளை பெருக்கிய சூரியின் உணவகம்! திறந்து வைத்தார் சிவகார்த்திகேயன்!

suri sivakarthikeyan restaurant

நடிகர் சிவகார்த்திகேயன் திறந்து வைத்த நடிகர் சூரியின் “அம்மன்” உணவகம் மற்றும் “அய்யன்” உணவகம்

பல தமிழ் படங்களின் மூலம்  நகைச்சுவை விருந்து அளித்து வந்த நடிகர் சூரி தமிழ் மக்களுக்கு அருமையான அறுசுவை உணவை அளிக்க எண்ணி 2017ம் ஆண்டு “அம்மன்” உயர்தர சைவ உணவகத்தை மதுரை காமராஜர் சாலையில் துவக்கினார்.

“அம்மன்” உணவகத்தின் சுவைமிகுந்த உணவிற்கு மக்கள் ஏகோபித்த ஆதரவை அளித்து நடிகர் சூரியை மகிழ்ச்சியில் ஆழ்த்தினர்.

தற்போது நடிகர் சூரி மேலும் தனது உணவக கிளைகளை பெருக்க வேண்டி “அம்மன்” உயர்தர சைவ உணவகம் மற்றும் “அய்யன்” உயர்தர அசைவ உணவகம் ஆகிய இரண்டு புதிய கிளைகளை மதுரை அவனியாபுரம், ஏர்போர்ட் பைபாஸ் சாலையில் துவக்குகின்றார்.

இந்த புதிய உணவகங்களை நடிகர் சிவகார்த்திகேயன் இன்று (நவம்பர் 1) குத்துவிளக்கேற்றி துவக்கிவைத்தார்.

பல பிரபலங்கள் மற்றும் பொது மக்கள் முன்னிலையைல் “அம்மன்” உயர்தர சைவ உணவகம் மற்றும் “அய்யன்” உயர்தர அசைவ உணவகத்தின் திறப்புவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

திறப்புவிழாவிற்கு வருகைதந்து வாழ்த்திய அனைவருக்கும் நடிகர் சூரி மற்றும் குடும்பத்தினர் தங்களது நன்றியினை தெரிவித்தனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version