- Ads -
Home உள்ளூர் செய்திகள் நெல்லை திருக்கோளூரில் செப் 2-ம் தேதி திருத்தேரோட்டம் ..

திருக்கோளூரில் செப் 2-ம் தேதி திருத்தேரோட்டம் ..

IMG 20220830 WA00701

திருநெல்வேலி அருகே நவதிருப்பதி திவ்யதேசங்களில் ஒன்றான திருக்கோளூரில் நடைபெறும் ஆவணித் திருவிழாவில் வரும் செப்.1-ம் தேதி தேர் கடாட்சித்தல், 2-ம் தேதி திருத்தேரோட்டம் நடைபெறும்.

தாமிரபரணி நதிக்கரையில் இருக்கும் நவதிருப்பதி திவ்யதேசங்களில் ஒன்று திருக்கோளூர். மூலவர்: வைத்தமாநிதி பெருமாள். கிழக்கு நோக்கிய சயனத் திருக்கோலம். தாயார் – கோளூர்வல்லி. பார்வதிதேவியின் சாபத்தால் தனது நவ நிதிகளையும் இழந்தான் குபேரன். நவ நிதிகள் பூலோகம் வந்து தாமிரபரணியில் நீராடி, ஸ்ரீமந் நாராயணனை நாதனாக அடைய விரும்பி தவம் செய்தன.

அப்படியே அவற்றை ஏற்று, தம்முடன் வைத்துக் கொண்டார் பகவான். இதனால், பெருமாளுக்கு வைத்தமாநிதி என்று திருப்பெயர். அத்துடன் தாமிரபரணியில் நவநிதிகள் நீராடிய தீர்த்தம் ‘நிதி தீர்த்தம்’ எனப்படுகிறது. பின்னர், குபேரன் இங்கு தவமிருந்து சாப விமோசனம் பெற்றான். அந்த நாள் மாசி மாதம் சுக்லபட்ச ஏகாதசி நாள். அந்நாளில் பல ஆயிரம் பேர் திருக்கோளூரில் குவிவார்கள்.

இப்போது ஆவணித் திருவிழா தொடங்கி நடந்து வருகிறது. செப்.1-ம் தேதி தேர் கடாட்சித்தல், 2-ம் தேதி திருத்தேர், 3-ம் தேதி தீர்த்தவாரி நடைபெறும்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version