- Ads -
Home அடடே... அப்படியா? மூடநம்பிக்கையால்… கர்ப்பிணி உடலை காட்டிலேயே விட்டுவந்த கிராமத்தினர்!

மூடநம்பிக்கையால்… கர்ப்பிணி உடலை காட்டிலேயே விட்டுவந்த கிராமத்தினர்!

lady died body kept in crematarium
  • கர்னூல் மாவட்டத்தில் கர்ப்பிணிப் பெண்ணின் உடலை காட்டில் விட்டு வந்த கிராமத்தார்.
  • நல்லமலைக் காடுகளில் நடந்தேறிய கோரம்.
  • கிராமத்திற்கு தீங்கு விளையும் என்ற மூடநம்பிக்கையால்
  • உயிரிழந்த கர்ப்பிணி பெண்ணின் உடலை மரத்தில் கட்டி விட்டு ஓட்டம் பிடித்தனர்.

கர்னூல் மாவட்டத்தில் கொடூரமான சம்பவம் நடந்தேறியுள்ளது. கிராமத்திற்கு கெடுதல் என்று எண்ணி சில கிராமத்தவர்கள் ஒரு பெண்ணின் இறந்த உடலை புதைக்காமலும் எரிக்காமலும் குறிக்கிட்டார்கள்.

அந்திமக் கிரியைகள் நடத்தவிடாமல் குடும்பத்தாரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டு இறந்த உடலை பிடுங்கி கொண்டு ஊருக்கு தொலைவில் உள்ள நல்லமலைக் காடுகளில் ஒரு மரத்தோடு கட்டிவிட்டு கையை உதறிக்கொண்டு திரும்பி வந்தார்கள். குடும்ப அங்கத்தினர்கள் எவ்வளவு கெஞ்சினாலும் கிராமத்தார் கேட்கவில்லை.

இரண்டு நாட்களுக்குப் பின்பு இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அதற்குள்ளேயே அந்த உடல் வீணாகி அழுகத் தொடங்கிவிட்டது.

கர்னூல் மாவட்டத்தில் உள்ள ருத்ரவரம் மண்டலம் பி நாகிரெட்டிபல்லி என்ற கிராமத்தில் சனிக்கிழமை நிகழ்ந்த இந்த சம்பவம் தாமதமாக வெளிச்சத்துக்கு வந்தது.

இறந்தவரின் பெயர் லாவண்யா. வயது இருபத்திஒன்று. மகா நந்தி அருகில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த லாவண்யாவுக்கு 2 ஆண்டுகள் முன்பு பி நாகிரெட்டி பல்லியைச் சேர்ந்த தர்மேந்திராவோடு திருமணம் நடந்தது. தற்போது அந்தப் பெண் நிறைமாத கர்ப்பிணி. வெள்ளிக்கிழமை இரவு அவருக்கு பிரசவ வலி வந்த போது குடும்ப அங்கத்தினர்கள் அவளை அருகில் உள்ள அரசாங்க மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள்.

டாக்டர்கள் நந்தியாலாவுக்கு எடுத்துச் செல்லும்படி கூறினார்கள். அதோடு கூட அவளை அவசர அவசரமாக நந்தியாலாவில் உள்ள அரசாங்க மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். பிபி அதிகமானதாலும் மேலும் சில உடல் நிலை பிரச்சினைகள் ஏற்பட்டதாலும் அவள் குழந்தையை பிரசவிக்காமலே மரணமடைந்தாள். மருத்துவர்கள் கொரோனா டெஸ்டுகள் நிர்வகித்த பிறகு நெகட்டிவ் வந்ததால் லாவண்யாவின் உடலை அவருடைய குடும்ப அங்கத்தினர்களுக்கு ஒப்படைத்தார்கள்.

சனிக்கிழமை காலை அவர்கள் லாவண்யாவின் உடலை நாகிரெட்டி பல்லிக்கு எடுத்து வந்தார்கள். அந்திமக் கிரியைகள் நடத்துவதற்கு ஏற்பாடு செய்து வருகையில் கிராமத்தார்கள் வந்து குறுக்கிட்டார்கள்.

நிறைமாத கர்ப்பிணியின் உடலுக்கு அந்திமகிரியை செய்தால் கிராமத்திற்கு நல்லதல்ல என்று தடுத்தார்கள். மறுப்பு தெரிவித்தார்கள். அவளுடைய சாபம் பட்டு கிராமம் அனைத்து விதத்திலும் நாசமாகி விடும் என்று வாதித்தார்கள். குடும்ப அங்கத்தினர்கள் எவ்வளவு கெஞ்சினாலும் அவர்கள் கேட்கவில்லை.

மயானத்திற்கு எடுத்துச் செல்வதற்கு குடும்பத்தினர்கள் செய்த முயற்சிகளுக்கு குறிப்பிட்டார்கள். இன்னும் அவர்கள் மீது தாக்குதலுக்கு வந்தார்கள். அதனால் எதுவும் செய்ய இயலாமல் இறந்த உடலை கிராமத்தாரிடம் குடும்பத்தார் ஒப்படைத்தனர். கிராமத்தினர் ஒரு வாகனத்தில் அவளுடைய உடலை ஏற்றி நல்லமலை காடுகளுக்கு எடுத்துச் சென்று ஒரு மரத்தோடு சேர்த்து கட்டி விட்டு திரும்ப வந்து விட்டார்கள்.

லாவண்யா உடலை கட்டிவிட்ட இடத்தின் அருகில் ஒரு கால்வாய் ஓடுகிறது. ருத்ரவரம் மண்டலத்தில் உள்ள சில கிராமத்தார்கள் பசுக்களையும் கால்நடைகளையும் அந்த கால்வாய்க்கு அருகில் மேய்ச்சலுக்கு எடுத்துச் சென்றபோது மாடு மேய்ப்பவர்கள் லாவண்யாவின் இறந்த உடல் மரத்தோடு கட்டி இருப்பதைக் கண்டார்கள்.

அதனால் அந்த கொடூர சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. போலீஸாருக்கு செய்தி தெரிவிக்கப்பட்டது. செய்தி அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தார்கள். இறந்த உடலை மீட்டு கைப்பற்றினார்கள். கிராமத்தாரிடம் பேசி அந்தம கிரிமைகள் செய்யும்படியாக நடவடிக்கை எடுத்துக் கொள்வோம் என்று தெரிவித்தார்கள்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version