- Ads -
Home அடடே... அப்படியா? கீழடி – கொந்தகையில் எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு!

கீழடி – கொந்தகையில் எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு!

kondagai kizhadi skelettn
kondagai kizhadi skelettn

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் நடந்து வரும் 6-ம் கட்ட அகழாய்வுப் பணிகள் நான்கு இடங்களில் நடந்தன.

அவற்றுள் கொந்தகையில் நடந்து வரும் பணிகளில் முதுமக்கள் தாழிக்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அதிலிருந்து எலும்புக் கூடுகள் மண்டை ஓடுகள், கை, கால் எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன.

இந்தச் சூழலில், இன்று மாலை மற்றோர் இடத்தில் அகழாய்வுப் பணிகள் நடந்து வந்தன. குழந்தையின் முழு எலும்புக் கூடு தெரிய வரவே, மாநில தொல்லியல் துறை துணை இயக்குநர் சிவானந்தம், தொல்லியல் ஆய்வாளர்கள் மற்றும் உதவியாளர்கள் எலும்புக் கூட்டை சேதம் இல்லாமல் எடுக்க முயன்றனர்.

அதனால் முழுமையாகத் தோண்டி சுத்தம் செய்து அதை சேதம் இல்லாத வடிவில் எடுத்துப் பார்த்தபோது
அதன் அளவு 92 செ.மீ நீளம் இருந்தது.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version