- Ads -
Home அடடே... அப்படியா? ஆடி மாதம் பிறந்ததால்.. கோயில் திருவிழாக்களை நடத்த அறநிலையத் துறை அனுமதி!

ஆடி மாதம் பிறந்ததால்.. கோயில் திருவிழாக்களை நடத்த அறநிலையத் துறை அனுமதி!

hrnce office e1561694728558
hrnce office e1561694728558

ஆடி மாதம் பிறந்துள்ள நிலையில், கோயில்களில் திருவிழாக்களை நடத்த இந்து சமய அறநிலையத் துறை அனுமதி அளித்துள்ளது!

கொரோனா ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் 25 ஆம் தேதி முதல் கோயில்கள் மூடப்பட்டுள்ளன. கோயில்களில்  தினசரி பூஜைகள் மட்டும், பக்தர்கள் எவரையும் அனுமதிக்காமல் கோயிலுக்குள்ளேயே நடத்தப்பட்டு வந்தன. திருவிழாக்கள் இதற்கும் அனுமதி அளிக்கப்படவில்லை . இதனால், சித்திரைத் திருவிழா உட்பட எந்த திருவிழாவும் கோயில்களில் நடை பெறவில்லை. 

ஊரடங்கு தளர்வு அறிவிக்கப் பட்ட நிலையில்  ஜூலை 1 ஆம் தேதி முதல், கிராமங்களில் சிறிய கோயில்கள் திறக்கப்பட்டுள்ளன. இருப்பினும் பக்தர்கள் ஆடி மாதத்தை ஒட்டி தங்கள் கோயில்களில் திருவிழாக்கள் நடத்த அனுமதி கேட்டனர் பல்வேறு அம்மன் கோயில்களிலும் ஆடி மாதம் ஊற்றுதல் மற்றும் வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடத்தப்படும் பெருவாரியான கிராமப்புற கோயில்களில் இவை பக்தர்களால் சிறப்பாக நடத்தப்படும் இந்நிலையில் தற்போது ஆடி மாதம் பிறந்துள்ளதால் கோயில்களில் திருவிழாக்கள் நடத்த இந்து சமய அறநிலையத்துறை அனுமதி வழங்கியுள்ளது

இது தொடர்பாக, அனைத்து சார்நிலை அலுவலர்களுக்கும் இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் க.பணீந்திர ரெட்டி அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்…

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள பட்டியல் சார்ந்த மற்றும் பட்டியல் சாராத கோயில்களில் பூஜைகள், திருவிழாக்கள் நடப்பது இன்றியமையாத ஒன்றாக திகழ்ந்து வருகிறது. கொரோனா பரவலால் பொதுமக்கள் நலன் கருதி கோயில்களில் அரசு வழிகாட்டுதலின்படி பக்தர்கள் தரிசனத்துக்கு இதுவரை அனு மதிக்கப்பட வில்லை. ஆனால், தினசரி பூஜைகள் மட்டும் அர்ச்சகர், பட்டர், பூசாரிகள் மூலம் தங்கு தடையின்றி நடந்து வருகிறது.

தற்போது அரசு வழங்கியுள்ள அறிவுரைகளின்படி கிராம பகுதிகளில் உள்ள கோயில்களில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அரசின் வழிகாட்டு நெறிமுறைகள், பாதுகாப்பு முறைகளை கடைபிடித்து பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், கோயில்களில் நடக்க வேண்டிய திருவிழாக்களுக்கு அனுமதி கோரியும் திருவிழா நிகழ்வுகளை யூ-டியூப் சேனல் மூலம் பதிவேற்றம் செய்ய அனுமதி வேண்டியும் சார்நிலை அலு வலர்களிடம் இருந்து முன் மொழிவுகள் வந்த வண்ணம் உள்ளன.

கோயில்களில் வழக்கமாக நடக்கும் திருவிழாக்களுக்கு தலைமையிட அனுமதி பெற வேண்டியதில்லை. திருவிழாக்கள் தொன்று தொட்டு கடைப்பிடிக்கப்பட்டு வரும் பழக்க வழக்கங்கள்படி கோயில் வளாகத்துக்குள் நடக்க வேண் டும். சொற்ப அளவிலான கோயில் பணியாளர்களைக் கொண்டு முகக்கவசம் அணிந்து, 6 அடி சமூக இடை வெளி கடைபிடித்து திருவிழாக்கள் நடக்க வேண்டும்.

விழாக்களில் உபயதாரர்கள், பக்தர்கள் கலந்துகொள்ள கண்டிப்பாக அனுமதி இல்லை. திருவிழாக்கள் தொடர்பாக மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெற வேண்டியிருப்பின் அந்த அனுமதியை பெற்று திரு விழாக்கள் நடத்தப்பட வேண்டும்.

விழாக்களை பக்தர்கள் தங்கள் வீடுகளில் இருந்து காணும் வகையில் வலைதள நேரடி ஒளிபரப்பு செய்ய நடவடிக்கை எடுக்கலாம்… என்று அந்த  சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version