- Ads -
Home அடடே... அப்படியா? ஆபாச செல்பி படத்தை மனைவி வெளியிட்டதால் விவாகரத்து கேட்டு வெளியேறிய அரசியல்வாதி!

ஆபாச செல்பி படத்தை மனைவி வெளியிட்டதால் விவாகரத்து கேட்டு வெளியேறிய அரசியல்வாதி!

உக்ரைனை சேர்ந்த அரசியல் தலைவர் ஒருவரின் மனைவி, தனது ஆபாச செல்பி படத்தை இன்ஸ்டாகிராம் பக்கங்களில் போட்டதால் அதிர்ச்சி அடைந்த கணவர், வீட்டை விட்டு வெளியேறியதோடு, விவாகரத்து கேட்டு மனுத் தாக்கல் செய்துள்ளார். உக்ரைனை சேர்ந்த அரசியல் தலைவர் அலெக்சாண்டர் பொலிடுகா. இவரது மனைவி அலியோனா பொலிடுகா (32). இவர்களுக்கு ஒரே ஒரு மகன். இவர்கள் கிழக்கு உக்ரைனில் உள்ள டெர்கெஜிவ்ஸ்கை மாவட்டத்தில் வாழ்ந்து வந்தனர். அலெக்சாண்டர் லோக்கல் கவுன்சிலின் தலைவராக இருந்து வந்தார். மேலும் சோப்பு தயாரிப்பு நிறுவனமும் நடத்தி வந்துள்ளார். தன்னை ஆதரிப்பதற்காக உக்ரைன் ராணுவத்திற்கு இவர் அதிக பணம் நன்கொடையாக கொடுத்து உள்ளார். இவர் ஒருபோதும் பகிரங்கமாக தனது மனைவியின் சமூக ஊடக நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்ததில்லை. இந்தநிலையில், அலியானா தனது ஆபாச செல்பி படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் போட்டுள்ளார். தனது படங்களை தானே அப்லோடு செய்துள்ள அலியானா, தங்க நிற ஸ்மார்ட் போனுடன் மெல்லிய இடுப்பை காட்டியபடி பல படங்களை போட்டுள்ளார். இது உலகம் முழுவதும் பரவி தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, மனைவியின் ஆபாச செல்பி படங்களை பார்த்து அதிர்ச்சி அடைந்த அலெக்சாண்டர், மனைவி மற்றும் மகனை விட்டு விட்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். மேலும் தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். கணவர் வீட்டை வீட்டு வெளியேறியது குறித்து அலியானா தனது சமூக வலைதளத்தில், “இப்போது என் வாழ்க்கையில் ஒரு கடினமான நேரமாக இருக்கிறது. நான் ஒரு தாய். எனது கணவர் மற்றும் எனது மகன் எனக்கு வேண்டும். நாங்கள் திருமணம் முடித்து 10 ஆண்டுகள் ஆகிறது. திடீரென எனது கணவர் வீட்டை விட்டு போய் விட்டார். எந்த விளக்கமும் அவர் கொடுக்கவில்லை. எனது மகனை விட்டும், என்னை விட்டும் அவர் சென்று விட்டார். எங்களுக்கு வாழ்வாதரம் இல்லை. எந்தவித ஆதரவும் இல்லை” என்று கூறியுள்ளார். அலியானாவுக்கு பலர் ஆதரவாக கருத்து தெரிவித்துள்ள போதிலும், ஆபாச படங்களை வெளியிட்டது தவறு என சுட்டிக்காட்டி உள்ளனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version