- Ads -
Home அடடே... அப்படியா? பொறுமை இன்றி.. பலர் முன்பு மணமகன் ‘அப்படி’ செய்ததால்… வெட்கத்தால் தலைகுனிந்த மணப்பெண்!

பொறுமை இன்றி.. பலர் முன்பு மணமகன் ‘அப்படி’ செய்ததால்… வெட்கத்தால் தலைகுனிந்த மணப்பெண்!

bride and groom in marriage hall
bride and groom in marriage hall
  • பொறுமையில்லாத மணமகன்…
  • அனைவரின் முன்பும் இவ்வாறு செய்தார்…
  • வெட்கத்தால் தலைகுனிந்தாள் மணப்பெண்.

திருமணம் என்றால் நூறாண்டுப் பயிர். மணவிழா வாழும் வரை மறக்காமல் இருக்கும்படியாக ஒவ்வொருவருக்கும் இனிமையான கணங்களாக நினைவில் இருக்கும். அதுவும் தற்போது வீடியோக்கள் வடிவில். அதனால்தான் திருமணம் தொடர்பான ஒவ்வொரு வீடியோவும் மிக அழகாக, அற்புதமாகத் தோன்றும்.

அவை சோஷியல் மீடியாவில் அடிக்கடி வைரலாக வலம் வருகின்றன. இப்போது அது போன்ற ஒரு வீடியோவைத் தான் பார்க்க போகிறோம்.

இந்த வீடியோவில் மணமகன் சென்டர் ஆஃ அட்ராக்ஷன் ஆக நின்றுள்ளார். அவர்செய்த வேலை பார்வையாளர்களை மிகவும் கவர்ந்துள்ளது. இந்த வீடியோவை பார்த்த பிறகு நீங்கள் கூட அதை ஒப்புக் கொள்வீர்கள்.

மணமகளை மணப்பெண்ணின் குடும்பத்தினர் மேடைமேல் அழைத்து வந்து கொண்டிருப்பதை இந்த வீடியோவில் பார்க்கலாம். அதுவரை காத்திருந்த மாப்பிள்ளை பொறுமையின்றி அவசரஅவசரமாக மணப்பெண்ணிடம் வந்து யாரும் எதிர்பாராத விதமாக அலேக்காக மணப்பெண்ணை தூக்கிச் சுமந்து கொண்டு போய் மேடையில் அமர வைத்தார்.

மணமகன் செய்த இந்த வேலையை எதிர்பார்க்காத புதுமணப்பெண் பாவம்.. என்ன செய்வதென்று தெரியாமல் வெட்கத்தால் தலை குனிந்து அவர் மேல் சாய்ந்தாள். அவ்விருவரையும் அந்த நிலையில் கேமராக்கள் கிளிக் செய்து மகிழ்ந்தன. இறுதியில் மணமகன் மணப்பெண்ணை சோபா மீது அமர வைத்தார்.

இந்த வீடியோவை நிரஞ்சன் என்பவர் இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்தார். சில கணங்களிலேயே வைரலாக மாறியது. நெட்டிசன்கள் வேடிக்கையான கமெண்ட்டுகளைப் போட்டு கொண்டாடி வருகிறார்கள்.

இவை அனைத்தும் சினிமாவின் பிரபாவம் என்று ஒருவர் கமெண்ட் செய்தார். ஏன் இத்தனை அவசரம் பிரதர் என்று இன்னொருவர் கமெண்ட் செய்தார்.

இதுவரை இந்த வீடியோ 5 ஆயிரம் வ்யூவைத் தாண்டியுள்ளது. இதோ நீங்களும் பாருங்கள்…

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version