― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeலைஃப் ஸ்டைல்அள்ளி தெளித்த அப்டேட்ஸ்.. வாட்ஸ்அப் அதிரடி!

அள்ளி தெளித்த அப்டேட்ஸ்.. வாட்ஸ்அப் அதிரடி!

whatsapp

பல மாத சோதனைக்குப் பிறகு, வாட்ஸ்அப் நிறுவனம் தனது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 2ஜிபி அளவிலான கோப்பு பகிர்வு வரம்பு மற்றும் வாட்ஸ்அப் குழுக்களில் உறுப்பினர் வரம்பை 512 பேருக்கு அதிகரிப்பது ஆகிய இரண்டு புதிய அப்டேட்களை வெளியிட உள்ளது.

வாட்ஸ்ப் நிறுவனத்தின் ‘Communities on whatsapp’ என்கிற புதிய திட்டத்தின் கீழ் இந்த அப்டேட்கள் செயல்படுத்தப்பட உள்ளன.

கூடுதலாக செய்திப் பரிமாற்றத்துக்கான எமோஜிக்களும் இனி வாட்சப்பில் இணைக்கப்படும் என மெட்டா நிறுவனத்தின் தலைவர் மார்க் சூக்கர்பர்க் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, ஃபேஸ்புக்கின் தலைமை நிறுவனமான மெட்டா நிறுவனம் இந்த வாட்ஸ் அப் செயலியையும் நிர்வகித்து வருகிறது.

வாட்ஸ் அப் செயலியில் அவ்வப்போது வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப புதிதாக அப்டேட்கள் செய்யப்பட்டு வருகின்றன.

குறிப்பாக 2022ம் ஆண்டு தொடங்கியதில் இருந்து புதுப்புது அப்டேட் தொடர்பான பல தகவல்களை வாட்ஸ் அப் அறிவித்து வருகிறது.

ஒவ்வொரு அப்டேட்டும் சோதனை முறையில் பீட்டா வெர்ஷனில் பயன்படுத்தப்பட்டு பின்னர் அனைவருக்கும் அறிமுகமாகும்.

பேஸ்புக்கில் லைக் மட்டுமே செய்யும் வசதி இருந்தது. பின்னர் அது எமோஜி ரியாக்‌ஷன்களாக அப்டேட் செய்யப்பட்டது. லைக், சோகம், சிரிப்பு என 6 ரியாக்‌ஷன்கள் கொடுக்கப்பட்டன. அதேபோல் எமோஜி ரியாக்‌ஷனை வாட்ஸ் அப் அறிமுகம் செய்துள்ளது.

இதற்கான சோதனை நடைபெற்று வந்த நிலையில் பீட்டா வெர்ஷனில் அறிமுகம் செய்யப்பட்டது. இது Android 2.22.8.3.பீட்டா வெர்ஷனில் அறிமுகம் ஆனது.

இந்நிலையில் பீட்டா பயன்பாட்டாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அனைவருக்கும் அறிமுகமாகியுள்ளதாக மார்க் குறிப்பிட்டுள்ளார்.

உங்களது வாட்ஸ் அப்பை அப்டேட் செய்தாலே இந்த அப்டேட் உங்களுக்கு கிடைக்கும். ஒருவேளை அப்டேட் செய்தும் கிடைக்காதவர்களுக்கு கூடிய விரைவில் கிடைக்கப்பெறும் எனக் கூறப்பட்டுள்ளது.

சேட் செய்யும் போது குறிப்பிட்ட மெசேஜை அழுத்திப்பிடித்தால் குறிப்பிட்ட எமோஜிகள் கிடைக்கும். அப்டேட்டின்படி, லைக், லவ், சிரிப்பு, ஆச்சரியம், சோகம், நன்றி ஆகிய எமோஜிக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இது மேலும் வாட்ஸ் அப் சேட்டை சுவாரஸ்யமாக்கும் எனத் தெரிகிறது

புதிதாக குரூப் சாட்டில் Poll ஆப்ஷனை வெளியிட இருக்கிறது வாட்ஸ் அப். Poll ஆப்ஷன் ஏற்கனவே பேஸ்புக்கில் நடைமுறையில் உள்ளது என்பது நாம் அறிந்த விஷயம். வாட்ஸ்அப்பில் எப்படி என்றால், குரூப்பில் முன்வைக்கப்படும் கேள்விகளுக்கு, பலவித ஆப்ஷனோடு ஓட்டெடுப்பு நடத்தலாம்.

எந்த ஆப்ஷனுக்கு குழுவின் உறுப்பினர்கள் அதிகம் வாக்களித்திருக்கிறார்கள் என்பதை இறுதியில் அறிய முடியும். நிர்வாகம் சார்ந்த முடிவுகளுக்கு இதுபோன்ற Poll ஆப்ஷன் உதவிகரமாக இருக்கும் என கூறப்படுகிறது. இது தற்போதைக்கு iOS பீட்டா வெர்சனில் மட்டும் கிடைக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Exit mobile version