- Ads -
Home லைஃப் ஸ்டைல் YouTube அப்டேட்: வீடியோவில் சிறந்த பகுதியை தேர்ந்தெடுத்துக் காண..!

YouTube அப்டேட்: வீடியோவில் சிறந்த பகுதியை தேர்ந்தெடுத்துக் காண..!

YouTube

சிறப்பான வீடியோக்களை பார்க்க வேண்டும் என்றால் இன்று பலரும் பரிந்துரைக்கும் தளம் யூடியூப் தான்.

இதில் கோடிக்கணக்கான வீடியோக்கள் கொட்டி கிடக்கிறது. ஷார்ட்ஸ் போன்ற சிறிய வீடியோக்கள் வருவதற்கு முன்னர் வரை நீளமாக வீடியோக்கள் தான் யூடியூப்பை ஆட்சி செய்தது.

ஆனால், தற்போது ஷார்ட்ஸ் வீடியோக்கள் வருகையால் நீளமான வீடியோக்களை பார்ப்பதற்கு மக்கள் விரும்புவதில்லை. இருப்பினும், நீளமான வீடியோக்களில் ஷார்ட்ஸ் வீடியோவை காட்டிலும் பல சிறந்த தகவல்கள் உள்ளன. எனவே, அவற்றை மட்டும் பார்ப்பதற்கு யூடியூப் ஒரு அருமையான வழியை தந்துள்ளது.

இந்த புதிய அப்டேட் மூலம் நீளமான யூடியூப் வீடியோ உள்ள சுவாரஸ்யமாக தகவலை நீங்கள் அறிந்து கொண்டு அவற்றை பார்க்க முடியும்.

யூடியூப் பிரீமியம் சந்தாதாரர்களுக்கான பரிசோதனையின் ஒரு பகுதியாக சில யூசர்கள் இதை சோதித்துள்ளனர். ஆனால் இப்போது, ​​டெஸ்க்டாப் மற்றும் மொபைல் பதிப்பில் உள்ள அனைத்து பார்வையாளர்களும் வீடியோவை இயக்கும் போது அதிக ரீப்ளே செய்யப்பட்ட சிறப்பம்சங்களைப் பெற முடியும்.

கூகுளுக்கு சொந்தமான வீடியோ ஸ்ட்ரீமிங் பிளாட்ஃபார்மான யூடியூப், யூசர்கள் வீடியோவின் மிகவும் பிரபலமான பகுதிகளை அடையாளம் காண வழி செய்கிறது.

இது வீடியோவின் சலிப்பூட்டும் விரிவான பகுதிகளைத் தள்ளுவதற்கு உதவும், மேலும் பிற யூசர்களால் அதிகம் பார்க்கப்படும் வீடியோவின் சுவாரஸ்யமான பகுதிக்குச் செல்ல உங்களை அனுமதிக்கும்.

வீடியோக்களின் பிரபலமான பகுதிகளை அடையாளம் காண உதவும் ஒரு வரைபடம் அதன் பிரகாரஸ் பாருக்கு பின்னால் தோன்றும் என்று யூடியூப் குறிப்பிட்டுள்ளது.

அதன் வரைபடம் (கிராப்) அதிகமாக இருந்தால், அந்த வீடியோவின் பகுதி அடிக்கடி பார்க்கப்பட்ட ஒன்று என்று அர்த்தம். இதை பயன்படுத்தி கொண்டு அந்த தருணங்களை விரைவாகக் கண்டறிந்து பார்க்கலாம்.

யூடியூப் புதிய அப்டேட் :

வீடியோவின் பெரும்பாலான ரீப்ளே செய்யப்பட்ட பகுதி மட்டுமல்லாமல், பல புதிய அப்டேட்கள் மற்றும் அம்சங்களையும் யூடியூப் அறிவித்துள்ளது.

அவற்றில் சில புதியவை, மேலும் சில ஏற்கனவே உள்ளவை. மேலும் இந்த அப்டேட்கள் பல சாதனங்களுக்கு விரிவுப்படுத்தப்படும்.

இவற்றில் ஒன்று வீடியோ அத்தியாயங்கள், இது மே 2020 ஆண்டில் தொடங்கப்பட்டது. வீடியோக்களை துணைப் பிரிவுகளாகப் பிரிக்க உதவுகிறது. இதனால் யூசர்கள் வீடியோவின் குறிப்பிட்ட பகுதிக்கு சென்று அவற்றை பார்க்க முடியும்.

இப்போது, ​​இந்த அம்சம் ஸ்மார்ட் டிவிகள் மற்றும் கேமிங் கன்சோல்களிலும் கிடைக்கும். மற்றொரு அம்சம் ‘சிங்கிள் லூப்’ என்று அழைக்கப்படுகிறது, இதுயூசர்கள் விரும்பும் வரை வீடியோக்களை மீண்டும் மீண்டும் பார்க்க அனுமதிக்கிறது.

யூடியூப்’இல் வீடியோ தரத்தை சரிசெய்ய கூடிய மெனுவில் இருந்து இந்த அம்சத்தை நீங்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இது போன்ற மேலும் பல புதிய அப்டேட்களை வரும் காலங்களில் எதிர்பார்க்கலாம் என்று இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version