- Ads -
Home அடடே... அப்படியா? மாநில அந்தஸ்து கேட்டு சபரிமலையில் புதுவை ஐயப்ப பக்தர்கள் பேனர்..

மாநில அந்தஸ்து கேட்டு சபரிமலையில் புதுவை ஐயப்ப பக்தர்கள் பேனர்..

1810951 puducherry

புதுவை அரியாங்குப்பம், தேங்காய்திட்டு பகுதியிலிருந்து ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு சென்ற போது மாநில அந்தஸ்து கேட்டு சபரிமலையில் புதுவை ஐயப்ப பக்தர்கள் பேனர் வைத்து வேண்டுதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கை சமீபமாக பலமாக எழுந்துள்ளது. அரசியல் கட்சிகளிடையே இதுதொடர்பாக நாள்தோறும் விவாதமும் நடந்து வருகிறது. சமூக அமைப்புகள் ஒன்றிணைந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அதிகாரம் கிடைக்கும் வகையில், மாநில அந்தஸ்து வேண்டும் என்ற குரலை உயர்த்தியுள்ளனர்.

இந்நிலையில் புதுவை அரியாங்குப்பம், தேங்காய்திட்டு பகுதியிலிருந்து ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு சென்றனர். அந்த பக்தர்கள் கோவிலின் 18-ம் படிக்கு கீழே புதுவைக்கு மாநில அந்தஸ்து கேட்டு பேனரை பிடித்துள்ளனர். இந்த படம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த பேனரில், புதுவை மக்கள் சுயமரியாதையை காக்க மாநில அந்தஸ்து வேண்டும்.

இது புதுவை மக்களின் குரல் என குறிப்பிட்டுள்ளனர். மாநில அந்தஸ்து வேண்டும் என்றால் அரசு ரீதியாகவும், அரசியல்ரீதியாகவும் டெல்லியை அணுக வேண்டும். மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க பாராளுமன்றம், மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்த வேண்டும். அதை விடுத்து கோவில் முன்பு பேனர் பிடிப்பதால் மாநில அந்தஸ்து கிடைத்துவிடுமா? என்ற விவாதமும் எழுந்துள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version