- Ads -
Home ஆன்மிகம் “பதிமூணு வயதில் பெரியவா பண்ணின முதல் உபன்யாசம்”

“பதிமூணு வயதில் பெரியவா பண்ணின முதல் உபன்யாசம்”

“பதிமூணு வயதில் பெரியவா பண்ணின முதல் உபன்யாசம்”


“பகவான் கிருஷ்ணருக்கு சியமந்தக மணியால வந்த அபவாதத்தைப் பத்தியும், பிறகு அது நீங்கின விதத்தையும் விளக்கமா சொல்லி முடிச்ச”-பெரியவா

( “என்னை மன்னிக்கணும். பார்க்க பாலகனா இருக்கிற நீங்க பெரிசா என்ன உபன்யாசம் செய்துடப்போறேள்னு அலட்சியமா இருந்தேன்.
என்னோட அறியாமையைத் தெளிய வைச்சு, இந்த பீடத்துக்கு நீங்க தகுதியானவர்தான்னு நிரூபிச்சுட்டேள்!” அப்படின்னு கதறின-வயசான மனிதர்)

கட்டுரையாளர்-பி.ராமகிருஷ்ணன்
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
நன்றி-  குமுதம் பக்தி (ஒரு பகுதி)

தன்னோட பதிமூணாவது வயசுல ஆசார்யா சன்யாசப் பட்டத்தை ஏத்துண்டு பீட ஆரோஹணம் பண்ணின அன்னிக்கு சாயந்திரம், மடத்துல இருந்தவா எல்லாரும் புதுப்பெரியவாளா (நம் பெரியவா) உங்களை எல்லாருக்கும் அறிமுகம் பண்ணறதுக்கு நடக்கப்போற கூட்டத்துல நீங்க உபன்யாசம் செய்யணும்னு பணிவா வேண்டிண்டா.

பாலகனாக இருந்த மகாபெரியவாளும் சரின்னு ஏத்துண்டார்.

புதுபெரியவா(நம் பெரியவா) உபன்யாசம் செய்யப்போறாங்கற விஷயம் பரவினதும் கும்பகோணத்தோட மொத்த ஜனமும் திரண்டு  வந்த மாதிரி கூட்டம் நிரம்பி வழிஞ்சுது.

அந்தக் கூட்டத்துல பெரியவா இருந்த மேடைக்கு நேர் எதிர்ல நின்னுண்டு இருந்தார் வயசான ஒருத்தர்.சுமார் அறுபது அறுபத்தஞ்சு வயசு இருக்கும் அவருக்கு.

“ஏற்கனவே இருந்த 66-வது சுவாமிகளோட உபன்யாசங்களை நிறைய கேட்டிருக்கேன். அவர் பழுத்த ஞானி.புராணம், இதிஹாசம் எல்லாம் பிரமாதமா சொல்லுவார். இந்த ஸ்வாமிகள் ஏதோ பால்குடி மாறாத குழந்தை மாதிரி இருக்கார்.இவர் என்னத்தை பேசப்போறாரோ!” பக்கத்து ஆசாமிகிட்டே ஒரு மாதிரி சலிப்போடு சொல்லிண்டு இருந்தார் அவர்.

ஆச்சு, பெரியவா உபன்யாசம் பண்ணத் தொடங்கினார். ஊசிவிழுந்தா கேட்கற அவ்வளவு நிசப்தம் அங்கே நிலவித்து.

கணீர் குரல்ல, பகவான் கிருஷ்ணருக்கு சியமந்தக மணியால வந்த அபவாதத்தைப் பத்தியும், பிறகு அது நீங்கின விதத்தையும் விளக்கமா சொல்லி முடிச்சார், பெரியவா.

அவ்வளவுதான், கூட்டத்துலேர்ந்து மொத ஆளா வந்து பரமாசார்யா திருவடியில விழுந்து நமஸ்காரம் செஞ்சார்அந்த முதியவர்.

“என்னை மன்னிக்கணும். பார்க்க பாலகனா இருக்கிற நீங்க பெரிசா என்ன உபன்யாசம் செய்துடப்போறேள்னு அலட்சியமா இருந்தேன். என்னோட அறியாமையைத் தெளிய வைச்சு, இந்த பீடத்துக்கு நீங்க தகுதியானவர்தான்னு நிரூபிச்சுட்டேள்!” அப்படின்னு கதறினார்.

மௌனமா ஒரு புன்னகை மட்டும் பண்ணினார்,மகாபெரியவர்.

அந்தப் புன்னகைக்கு அர்த்தம் என்னங்கறது பரமாசார்யாளுக்குமட்டுமே தெரிஞ்ச பரமரகசியம்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version