- Ads -
Home ஆன்மிகம் “பெரியவா இன்னும் வரலியே!”

“பெரியவா இன்னும் வரலியே!”

“பெரியவா இன்னும் வரலியே!” (இது ஒரு மறுபதிவு)10516784_868010533244113_998432334767873536_n மிகவும் வயஸான ஒரு பாட்டிக்கு, தன் வீட்டிலும் ஹோமம் செய்ய வேண்டும் என்று மிகுந்த ஆசை. பெரியவாளிடம் அளவு கடந்த பக்தி. அப்போதெல்லாம் யாராவது தங்கள் க்ருஹத்திற்கு பெரியவாளை அழைத்தால், பெரியவாளின் திருவடிகள் அவ்வீடுகளில் கட்டாயம் பதியும். இந்தப் பாட்டியும் ஹோமத்துக்கு பெரியவாளை அழைக்க வேண்டும் என்று ரொம்ப ஆசைப்பட்டாள். பெரியவாளிடம் வேண்டிக்கொண்டதும், “அதுக்கென்ன? வரேனே” என்று சொல்லிவிட்டார். பாட்டிக்கோ பரம சந்தோஷம்! ஹோமத்துக்கு பார்த்துப் பார்த்து ஏற்பாடு பண்ணினாள். ஆயிற்று. ஹோமம் ஆரம்பித்தாகிவிட்டது. “பெரியவா இன்னும் வரலியே!..” பாட்டி வாசலுக்கும் உள்ளுக்கும் நடையாய் நடந்து கொண்டிருந்தாள். பூர்ணாஹுதியைக் கூட கொஞ்சம் பொறுத்திருந்து பார்த்துவிட்டு செய்யலாம் என்று வேத ப்ராஹ்மணர்கள் சொன்னார்கள். அப்போதும் கூட பூர்ணாஹுதி குடுக்கும் வரை பெரியவா வரவேயில்லை. பாட்டிக்கு ஒரே சோகம். ஹோமப்ரஸாதம் எடுத்துக் கொண்டு பெரியவாளை தர்சனம் பண்ணச் சென்றாள். “பெரியவா ஹோமத்துக்கு வர்றதா சொன்னேள். ஆனா, வராம இருந்துட்டேளே!” தன் ஆதங்கத்தை பெரியவாளிடம் புலம்பினாள். அழகாக சிரித்துக் கொண்டே அவள் சொல்வதைக் கேட்டார். “நா, ஹோமத்துக்கு வரலேன்னு யார் சொன்னா? வந்தேனே!..” பாட்டிக்கு ஒண்ணும் புரியவில்லை…………………. வந்தாரா? “என்னது? பெரியவா வந்தேளா? நேக்கு ஒண்ணும் புரியலே…” “ஹோமத்தை போட்டோ எடுத்தியா?” “எடுத்தா…..” “அதை ப்ரிண்ட் போட்டுப் பாரு” பாட்டி உடனேயே போட்டோ எடுத்தவனை அதை ப்ரிண்ட் போடத் துரத்தினாள். வந்ததும் அவைகளைப் பார்த்தபோது, அதில் ஒன்று பூர்ணாஹுதி நடந்தபோது எடுக்கப்பட்ட படம்.. …. அந்த அக்னி ஜ்வாலை ஒரு ஆள் உயரத்திற்கு எழும்பி எரிகிறது…..அந்த ஜ்வாலை ஸாக்ஷாத் பெரியவா தண்டத்துடன் நிற்பது போலவே எரிந்து கொண்டிருந்தது! அந்த போட்டோ இன்றும் சேலத்தில் உள்ள ஸ்ரீ பெரியவா க்ருஹத்தில் உள்ளது. “நா, ஹோமத்துக்கு வரலேன்னு யார் சொன்னா? வந்தேனே!..” பெரியவா சொன்னது எத்தனை சத்யம்!! பஞ்ச பூதங்களையும் படைத்தவன் எவனோ, அவனே இங்கே அக்னி ஸ்வரூபமாக ப்ரத்யக்ஷமாக நிற்கிறான்!! இதில் நம்முடைய பக்தியை விட, மஹான்களின் பரம கருணை, அவ்யாஜ கருணை ஒன்றினால் மட்டுமே இம்மாதிரி நடக்கும்

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version