― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்புயல் உருவாகி அதன் மூலம்தான் மழைநீர் நமக்கு கிடைக்கும் காலம் 

புயல் உருவாகி அதன் மூலம்தான் மழைநீர் நமக்கு கிடைக்கும் காலம் 

“ஒரு புயல் உருவாகி அதன் மூலம்தான் மழைநீர் நமக்கு கிடைக்கும் காலமாகிவிட்டது”

(.மரம் மழை வெள்ளம் பற்றி அன்றே சொன்ன மகா பெரியவா)  18403116 1556446661067160 1497124748506696567 n 3

(. கண் மூடித்தனமாக காடுகளிலுள்ள மரங்களை வெட்டி வீழ்த்தி நமக்கு நாமே ஆபத்தை விலை கொடுத்து வாங்கி விட்டோம். மரங்கள் குறைவதால் பூமியில் சூடு அதிகரிக்கிறது. Ozone படலத்தில் ஓட்டை வீழ்ந்து விட்டதால் சூரியனின் ultra violet கதிர்கள் பூமியில் இறங்குகின்றன)

 கல்கி அருள் வாக்கு06-12-2015
முன்பெல்லாம் மழைக்காலத்தில் மழை பெய்தது. கடும் வெயிலால் மக்கள் அவதியுற்று நீர் நிலைகள் அனைத்தும் வற்றி தண்ணீருக்காக திண்டாடும் தமிழ்நாட்டில் அதுவும் அக்னி நட்சத்திரம் தொடங்கும் சமயத்தில் மழை பெய்து பூமியை குளிரச் செய்து மக்களின் மனமும் மகிழ்ச்சியடைந்தது. வரவேற்கத்தக்கதே.
ஆனால் ஒரு புயல் உருவாகி அதன் மூலம்தான் மழைநீர் நமக்கு கிடைக்கும் காலமாகிவிட்டது. கண் மூடித்தனமாக காடுகளிலுள்ள மரங்களை வெட்டி வீழ்த்தி நமக்கு நாமே ஆபத்தை விலை கொடுத்து வாங்கி விட்டோம். மரங்கள் குறைவதால் பூமியில் சூடு அதிகரிக்கிறது. Ozone படலத்தில் ஓட்டை வீழ்ந்து விட்டதால் சூரியனின் ultra violet கதிர்கள் பூமியில் இறங்குகின்றன. இவ்வகைக் கதிர்கள் கடலில் மிதக்கும் ஐஸ் பாறைகளில் படுவதால் அவை கரைந்து நீரின் அளவு கடலில் அதிகரிக்கிறது. தண்ணீரின் அளவு கூடுவதால் நிலத்தை தண்ணீர் ஆக்கிரமிப்பு செய்து நிலத்தை விழுங்கி வருகிறது. மரத்தை வளர்ப்பதால் மட்டுமே நம்மால் இனி நிலத்தை பாதுகாத்து போதிய அளவு மழையும் பெற இயலும்.
 அகால மழையினால் பல ஆபத்துக்களும் நிறைந்துள்ளன. cervical spondylitis, lumbar spondylitis, lordosis போன்ற நோயுள்ளவர்கள் அகால மழையில் அதிக வலியை உணருவார்கள்.

விளக்கெண்ணையை சூடு செய்து பஞ்சில் நனைத்து வலி உள்ள இடங்களில் சிறிது நேரம் வைத்திருந்து பிறகு வெந்நீர் ஒத்தடம் கொடுக்கலாம். தணலில் வறுத்த பண்டங்களைத் தவிர்த்து உணவை சூடாக சாப்பிட வேண்டும்.

அகால மழையினால் குளம்போல மழைத்தண்ணீர் ரோடுகளில் தேங்கி நிற்கக்கூடும். அவைகளில் காலை வைப்பதால் நுண்கிருமிகள் பித்த வெடிப்புகளிலும் கால்நகத்தின் இடுக்குகளிலும் நுழைந்து பேராபத்தை தோற்றுவிக்கும். அதனால் வீட்டுக்குச் சென்றவுடன் வெந்நீரில் காலை நன்றாக அலம்ப வேண்டும். முகத்தை பாதுகாப்பது போல கால்களையும் அகால மழையில் மிகவும் சிரத்தையுடன் பாதுகாக்க வேண்டும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Exit mobile version