- Ads -
Home ஆன்மிகம் ஆஞ்சநேயர் வைத்தியம் – இது பெரியவா! ஆசார்யாள் வைத்தியம்- இது அன்பர்!

ஆஞ்சநேயர் வைத்தியம் – இது பெரியவா! ஆசார்யாள் வைத்தியம்- இது அன்பர்!

“ஆஞ்சநேயர் வைத்தியம்”-இது பெரியவா

“ஆசார்யாள் வைத்தியம்”-இது அன்பர்.

(இரண்டுமே உண்மை தான்! )1391799 656538261058009 260030728 n 4

தொகுப்பு-கோதண்டராம சர்மா

தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

ஓர் அன்பருக்கு முகத்தில் பல சரும நோய்கள் ஏற்பட்டு,முகம் கறுப்பாகி விட்டது. வெளியில் தலை காட்டுவதற்கே அவருக்கு வெட்கமாக இருந்தது.

பெரியவாளிடம் வந்தார்.மிகவும் வருத்தத்துடன் முகத்தின் கறுப்பு பற்றிக் கூறி,கருமை விலக வழி சொல்ல வேண்டுமென்று பிரார்த்தித்தார்.

ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாத்தி, பின் வெண்ணெயை வழித்தெடுத்து முகத்தில் பூசிக்கொண்டு ,கொஞ்ச நேரம் ஊற வைத்து ,துணியால் துடைத்து விடும்படி பெரியவா கூறினார்கள்.

பத்துப்பன்னிரண்டு நாட்கள் அவ்வாறே செய்தார் அன்பர். முகத்தில் பூசிய வெண்ணெயைத் துணியால் துடைத்தபோது கருமை கொஞ்சங் கொஞ்சமாக வெண்ணெயுடன் வந்துவிட்டது.

முகம் பளிச்சென்று ஆகிவிட்டது.

“ஆஞ்சநேயர் வைத்தியம்” என்றார்கள் பெரியவா .

“இல்லை…ஆசார்யாள் வைத்தியம்”என்றார் அன்பர்.

இரண்டுமே உண்மை தான்!

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version