- Ads -
Home ஆன்மிகம் ஆன்மிகச் செய்திகள் ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி: காஞ்சி வரதராக காட்சியளித்த நம்பெருமாள்!

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி: காஞ்சி வரதராக காட்சியளித்த நம்பெருமாள்!

வைகுண்ட ஏகாதசிப் பெருவிழாவில், பகல் பத்து ஆறாம் திருநாளான இன்று, நம்பெருமாள் அர்ஜுன மண்டபத்தில் வரதரின் கோலத்தில் எழுந்தருளினார். 

srirangam day 6a

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் நடைபெற்று வரும் வைகுண்ட ஏகாதசிப் பெருவிழாவில், பகல் பத்து ஆறாம் திருநாளான இன்று, நம்பெருமாள் அர்ஜுன மண்டபத்தில் வரதரின் கோலத்தில் எழுந்தருளினார். 

பெரிய திருமொழி தொடக்கத்திற்கு ஏற்க, ஸ்ரீராமானுஜருக்கு காஞ்சி வரதராஜராக கருட  வாகனத்தில் கீழப்படியில் காட்சி கொடுத்தது போல், இன்று சிகப்பு சிக்குத் தாடையில் வரதன் கலிங்கத்துராய் , சூரிய சந்திர வில்லைகள், ஓட்டியாண காப்பு  சாற்றி, பங்குனி உத்திர பதக்கம், வைஜயந்தி பதக்கம், அடுக்கு பதக்கங்கள், அரைச் சலங்கை, மகர கர்ண பத்ரம்,  வைர  அபயஹஸ்தத்துடன், வெண்பட்டு வஸ்திரம், 2 வட பெரிய முத்துச் சரம் சாற்றி, நெல்லிக்காய் பொட்டு மாலை, தங்கப்பூண் பவள மாலை, பின் சேவையாக – மகரி பதக்கம், புஜ கீர்த்தி, தாயத்து தொங்கல் கைகளில் சாற்றி  சேவை சாதித்தார்..

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version