- Ads -
Home கிரைம் நியூஸ் உறவுக்கு அழைத்து வராத பெண்ணைக் கொன்று அருகிலே உறங்கி போன 14 வயது சிறுவன்!

உறவுக்கு அழைத்து வராத பெண்ணைக் கொன்று அருகிலே உறங்கி போன 14 வயது சிறுவன்!

deadbody

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மிதுன்தாதியா – ஷீலா தேவி தம்பதிக்கு மூன்று குழந்தைகள் இருந்த நிலையில் இவர்கள் எல்லாரும் திருப்பூர் பனியன் கம்பெனியில் வேலை செய்வதற்காகத் தமிழகம் வந்துள்ளனர்.

இவர்களுடன் மிதுனின் சகோதரர்கள் இரண்டு பேரும் வந்துள்ளனர்.இவர்கள் அனைவரும் கொங்கு மெயின்ரோடு கொடிக்கம்பம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து மிதுன் குடும்பம் ஒரு வீட்டிலும், அவரது சகோதரர்கள் ஒரு வீட்டிலும் தங்கி வந்துள்ளனர்., மிதுனின் சகோதரர்கள் இருந்த வீட்டில் 14 வயது சிறுவனும் தங்கி இருந்துள்ளார்.

மிதுன் வீட்டில் இல்லாத நேரமாய் பார்த்து அந்த சிறுவன் அடிக்கடி வீட்டுக்கு வந்து கொண்டிருக்க ஷீலா தேவிக்கும் சிறுவனுக்கும் இடையே தகாத உறவு இருந்து வந்துள்ளது.

இதனை கண்டுபிடித்த மிதுன் இரண்டு பேரையும் கண்டித்துள்ளார். ஆனால், இவர்களுக்கிடையே அந்த உறவு நீடித்துக் கொண்டே வந்துள்ளது. இதனால் ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த மிதுன் தனது குழந்தைகளை அழைத்து கொண்டு பீகாருக்கு சென்றுள்ளார். அப்போதும், ஷீலா அவருடன் செல்லாமல் இங்கேயே இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை ஷீலா மிதுனின் போனை எடுக்காததால் சந்தேகமடைந்த மிதுன், அவரது சகோதரர்களை விட்டு ஷீலாவின் வீட்டில் சென்று பார்க்க சொல்லியுள்ளார். அங்கே, ஷீலா இறந்த நிலையிலும் அந்த சிறுவன் ஷீலாவின் அருகே உறங்கிக் கொண்டிருந்த நிலையிலும் இருந்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மிதுனின் சகோதரர்கள் காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்துள்ளனர். விரைந்து சென்ற காவல்துறையினர் சிறுவனிடம் மேற்கோண்ட விசாரணையில், “தான் வந்து உறவு வைத்துக் கொள்ள அழைத்த போது ஷீலா அதற்கு இணங்கவில்லை.

அந்த ஆத்திரத்தில் கொலை செய்து விட்டு இங்கேயே தூங்கி விட்டேன்” என்று கூறியுள்ளார். சிறுவனின் வாக்குமூலம் காவல்துறையினர் அதிர வைத்துள்ளது. இதனையடுத்து சிறுவனை கைது செய்த காவல்துறையினர், விசாரணையை தொடர்ந்து வருகின்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version