- Ads -
Home தமிழகம் ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி அடிக்கல் நாட்டுவிழா! முதல்வர் பங்கேற்பு!

ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி அடிக்கல் நாட்டுவிழா! முதல்வர் பங்கேற்பு!

ramnad

ராமநாதபுரம், விருதுநகரில் புதிய அரசு மருத்துவக்கல்லூரிகள் மற்றும் குடிநீர் திட்டங்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். ராமநாதபுரம் அருகே பட்டணம் காத்தான் பகுதியில் அமைய உள்ள புதிய மருத்துவக்கல்லூரி கட்டுமான பணிக்கான அடிக்கல் நாட்டுவிழா இன்று நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இன்று காலை சென்னையிலிருந்து விமானம் மதுரை வந்து இறங்குகினார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில், அமைச்சர்கள் உதயகுமார், செல்லூர் ராஜூ உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் முதல்வரை வரவேற்றனர்.

பின்னர் கார் மூலம் ராமநாதபுரம் பட்டனம்காத்தான் சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலம், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மற்றும் புவி அறிவியல் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தன் தலைமையில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் புதிய மருத்துவக்கல்லூரிக்கு அடிக்கல் நாட்டினார்.

இவ்விழாவில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், அமைச்சர்கள் ராஜேந்திரபாலாஜி, திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், செல்லூர் ராஜூ, தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், சண்முகம், அன்பழகன், சரோஜா, சம்பத், கருப்பணன், காமராஜ், மணியன், உடுமலை ராதாகிருஷ்ணன், துரைக்கண்ணு, கடம்பூர் ராஜூ, உதயகுமார், வெல்லமண்டி நடராஜன் உள்பட அமைச்சர்கள், எம்எல்ஏ. கருணாஸ், எம்.பி. ரவீந்திரநாத் குமார், அரசு தலைமை கொறடா, வாரிய தலைவர்கள், கலெக்டர் வீரராகவ ராவ் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். இவ்விழாவினை முன்னிட்டு வெளிமாவட்ட போலீசார் உட்பட 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version