- Ads -
Home தமிழகம் இரண்டு நாள் வெளிய போலாம்! மூணு கலர்ல பஸ்! எங்க தெரியுமா?

இரண்டு நாள் வெளிய போலாம்! மூணு கலர்ல பஸ்! எங்க தெரியுமா?

ariyalur 2

மக்கள் வெளியே நடமாடுவதையும் மக்கள் கூட்டத்தை கட்டுக்குள் கொண்டு வரவும் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனால் மக்கள் அத்தியாவசிய தேவைக்களுக்கு மட்டும் வெளியே வரும் படி செய்ய, அரியலூர் மாவட்டத்தில் பச்சை, ஊதா, ரோஸ் என மூன்று வண்ணங்களில் பாஸ்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

அந்த பாஸ்கள் மூலம் வாரத்திற்கு இரண்டு நாட்கள் மட்டுமே வெளியே வர முடியும். அதவாது, பச்சை நிற பாஸ்- திங்கள், வியாழன், ஊதா நிற பாஸ்- செவ்வாய், வெள்ளி, ரோஸ் நிற பாஸ்- புதன்,சனிக்கிழமைகளில் பயன்படுத்திக் கொண்டு காய்கறிகள் வாங்கி வரலாம்.

காலை 6 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையே செல்லும் அந்த பாஸ் மூலம், 15 முதல் 60 வயதுக்கு உட்பட்ட நபர்கள் தான் செல்ல முடியும்.

அதுமட்டுமில்லாமல் ஒரு வீட்டுக்கு ஒருவர் மட்டுமே செல்ல அனுமதி வழங்கப்படும். இருப்பினும், மருத்துவ அவசரங்களுக்கு இந்த பாஸ் முறையில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.

மேலும், இந்த பாஸ்களை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மூலமாக வழங்கப்படும் என்றும் உணவு மற்றும் வேளாண் பொருட்களை லாரிகளில் கொண்டு செல்ல வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கடிதம் பெற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version