- Ads -
Home தமிழகம் தாய்க்கு உதவி தேவை.. இராணுவ வீரரின் ட்விட்! பதிலளித்த முதல்வர்!

தாய்க்கு உதவி தேவை.. இராணுவ வீரரின் ட்விட்! பதிலளித்த முதல்வர்!

cm 3
cm 3

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவுதலின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. ஊரடங்கு அமலில் இருப்பது ஒரு வகையில் நல்லது என்றாலும் ஆதரவற்றோர்கள், அமைப்பு சாரா தொழிலாளர்கள், முதியவர்கள் உள்ளிட்டோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு பொருட்கள் கிடைக்காமலும், வருமானமில்லாமல் திணறும் சூழலும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவர் அவரது ட்விட்டர் பக்கத்தில், ஐயா நான் குஜராத், அகமதாபாத்தில் பாதுகாப்பு படையில் இருக்கிறேன். எனக்கு உடன் பிறந்தவர்கள் யாரும் இல்லை. அப்பாவும் இல்லை. எனக்கு அம்மா மட்டும் தான். அவருக்கு 89 வயது ஆகிறது. என் தாயார் வீட்டில் தனியாக இருக்கிறார். அவருக்கு தேவையான மருத்துவ உதவி செய்ய வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

அந்த பதிவுக்கு பதில் அளித்த முதல்வர், தாங்கள் தாயாருக்கு தேவையான மருந்துகள் அவரிடம் கொடுக்கப்பட்டுள்ளது. அவருக்கு பரிசோதனை செய்து பார்த்ததில், அவருக்கு எந்த பிரச்சனையும் இல்லை. அவர் நலமாக இருக்கிறார். நீங்கள் தைரியமாக, நிம்மதியாக பணியாற்றுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version