ஐடி துறையை மத்திய அரசுதான் காப்பாற்ற வேண்டும்: கேடிஆர் கடிதம்!

ktr telangana
ktr telangana

மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கு தெலங்காணா அமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.

ஐடி துறையில் உள்ள சிறிய, மத்தியதர நிறுவனங்களை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு மத்திய அரசு மீது இருக்கிறதென்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அது போன்ற அமைப்புகளுக்கு மத்திய அரசிடம் பெண்டிங்கில் உள்ள ஜிஎஸ்டி, ஐடி ரீபண்டுகளை உடனே அளிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.

ஐடி, எம்எஸ்எம்ஈ களுக்கு மிகக் குறைந்த கால கடன் அளிப்பதன் மூலம் லேஆஃப் களை நிறுத்த முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஐடி பார்க்குகள், செஜ் களில் உள்ள அலுவலகங்களுக்கு பிரத்தியேகமான ஆரோக்கிய வழிகாட்டுதலோடு கூடிய ஸ்டாண்டர்டு ஹெல்த் கோடு களையும் அறிவிக்க வேண்டும் என்று கேடிஆர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது பல கம்பெனிகளிலும் உள்ள ஊழியர்களின் அடர்த்தி, ஆபீஸ் இடங்களோடு ஒப்பிட்டால் அதிகமாக இருக்கிறது என்றார். இதனை ஒவ்வொரு ஊழியருக்கும் 100 லிருந்து 150 சதுர அடியாக தீர்மானிக்க வேண்டும் என்றார்.


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.