நாம் தோற்கவில்லை; நம்பிக்கை வாக்கெடுப்பில் பின்னடைவு மட்டுமே: உற்சாகமூட்டும் எடியூரப்பா!

yediyurappa in house

சட்டசபைத் தேர்தலில் பாஜக.,வுக்கு தோல்வி ஏற்படவில்லை, நம்பிக்கை வாக்கெடுப்பில் பின்னடைவு ஏற்பட்டிருக்கலாம் அவ்வளவுதான். அதற்காக யாரும் நம்பிக்கை இழக்கத் தேவையில்லை.

கட்சியை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வேன். கட்சிப் பணிகள் தொடர்ந்து சிறப்பாக நடக்கும். நம்பிக்கை வாக்கெடுப்பில் பின்னடைவு ஏற்பட்டதற்காக தொண்டர்கள் சோர்வு அடையத் தேவையில்லை. அடுத்து வரவுள்ள எம்.எல்.சி தேர்தல், நாடாளுமன்ற பொதுத் தேர்தலுக்கு தயாராக வேண்டியுள்ளது என்று கூறினார் எடியூரப்பா.

நேற்று மல்லேஸ்வரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எடியூரப்பா இவ்வாறு கூறியுள்ளார்.

எடியூரப்பா முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்த போது, அதனை அறிந்து மிகவும் வருத்தத்தில் இருந்தார் பாஜக., தொண்டர்.

தாவணகரே சென்னகிரியைச் சேர்ந்த சென்னபசப்பா என்பவர், எடியூரப்பா பதவி விலகல் குறித்து அறிந்து மன அழுத்தத்தில் இருந்ததாகத் தெரிகிறது. தொடர்ந்து, மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இது குறித்து அறிந்ததும் எடியூரப்பா மிகவும் மனம் வருந்தி அவரது வீட்டுக்கு நேரில் சென்று அவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.