அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா, Netflix-வுடன் இணைந்து படங்களை தயாரிக்க முடிவு செய்துள்ளார்.
Netflix என்பது வீடியோ பட சேவையை அனைத்து நவீன சாதனங்கள் வழியாகவும் வழங்கும் சாதானம் ஆகும். கணினி, ஸ்மார்ட்போன், PC, Playstation என அனைத்திலும் Netflix வழியாக படம் பார்க்க முடியும்.
Video Streaming மூலமாக படம் பார்க்கும் வசதியை Netflix ஏற்படுத்தித் தருவதால், உலகளவில் மிகவும் புகழ்பெற்ற ஒன்றாக இது உள்ளது.
இந்நிலையில், அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா Netflix-வுடன் இணைந்து படங்களை தயாரிக்க உள்ளார். இது தொடர்பாக Netflix தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதில் கூறுகையில், ‘படங்கள், Netflix தொடர்கள் தயாரிக்க ஒபாமாவும், மிச்செல் ஒபாமாவும் Netflix-வுடன் பல ஆண்டு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளனர். தொடர்கள், ஆவணப் படங்கள், ஆவணத் தொடர்கள், திரைப்படங்கள் போன்றவற்றை தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பராக் ஒபாமா கூறுகையில், ‘இந்த உலகத்துக்கு கதைகள் கூற ஆர்வப்படும் திறமைகளை ஊக்குவிக்க உள்ளோம்’ என்றார்.



