கல்யாணமே ஆக மாட்டேங்குதேன்னு கவலைப் படுறீங்களா? இதைச் செய்து பாருங்க..!

thirumanacheri

திருமணஞ்சேரி, காளஹஸ்தி, திருநாகேஸ்வரம், நித்யகல்யாணப் பெருமாள், சுமங்கலி பூஜை, யார் எது சொன்னாலும் என்ன பண்ணியும் எங்க வீட்டில் திருமணம் நடக்க மாட்டேங்குது. பணம்,காசு பஞ்சமில்லை…

– இப்படி நீங்கள் சொல்லிக் கொண்டே இருக்கிறீர்களா? அப்படி என்றால் உங்களுக்கு ஒரு பரிகாரப் பரிந்துரை…

ஆண், பெண் யாராக இருந்தாலும் வியாழக்கிழமை காலையில் தலைக்குக் குளியுங்கள்.

ஊற வைத்த பச்சரிசி 200 கிராம், ஊற வைத்த பாசிப் பருப்பு 300 கிராம், நாட்டுச் சர்க்கரை 200 கிராம், அகத்திக்கீரை உருவியது ஒரு கட்டு….

இவற்றை எல்லாம் ஒன்றாகக் கலக்கி கன்று உள்ள பசு மாட்டுக்கு உங்கள் கையால் கொடுங்கள். அப்போது பசுவின் கழுத்தைச் சொறிந்து, திமிலை நீவி, முதுகைத் தடவி வாலை லேசாக வருடி உருவி விடவேண்டும்.

எல்லாம் தீர்ந்த பின் பாத்திரத்தில் இருக்கும் நீரை உள்ளங்கையில் விட்டுக் குடிக்கவும்.

தலையில் ஈரம் இருக்கக் கூடாது. பெண்கள் தலையிலிருந்து நீர் சொட்டக்கூடாது. பூச் சூடக்கூடாது. பசுவை வலம் வந்து கண்ணில் ஒற்றிக் கொள்ளவும்.

ஒரே வியாழக்கிழமை போதும். கெட்டி மேளம் தான். மறக்காம நமக்கு பத்திரிகையை அனுப்பி வையுங்க…!