ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானியின் மகன் திருமண நிச்சயதார்த்தத்துக்காக வெளியிடப்பட்ட டிஜிட்டல் பத்திரிகை சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ், தமது பள்ளி தோழி ஸ்லோகா மேத்தாவை கரம் பிடிக்க உள்ளார். இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் வரும் 30-ம் தேதி மும்பையில் நடைபெற உள்ள நிலையில், அதற்கான பத்திரிகை டிஜிட்டல் முறையில் வடிவமைத்து அண்மையில் வெளியிடப்பட்டது.
அதில் மணமக்கள் புகைப்படங்கள் வைத்து, இருவரது குடும்பங்கள் அழைக்கும் வகையில் பத்திரிகை வடிவமைக்கப்பட்டு இருந்தது. இது சமூக வலைத்தளங்களில் அதிகளவு பகிரப்பட்டு வருகிறது. மும்பையில் உள்ள சித்தி விநாயகர் கோயிலில் நிச்சயதார்த்த பத்திரிகையை வைத்து, நீதா அம்பானி மற்றும் அவரது மகன் ஆகாஷ் ஆகியோர் வழிபட்டனர்.
இவர்களின் திருமணம் இந்தாண்டு டிசம்பர் மாதம் நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது.



