டிராபிக் ராமசாமியா? டிராபிக் அந்தோணிசாமின்னு பேர மாத்துங்கடா…!

traffic ramasamy 1

சமூக சேவகர் டிராபிக் ராமசாமியின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு அதே பெயரில் ஒரு படம் தயாராகிறது. இந்தப் படத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் நடிக்கிறார்.

இந்தப் படத்தின் முதல் லுக் பேனர்கள் வெளியான நிலையில், அதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் சிலர், இது டிராபிக் ராமசாமியின் பிம்பத்தை பிரதிபலிக்கவில்லை என்று அங்கலாய்த்திருக்கின்றனர். டிராபிக் ராமசாமி நெற்றியில் பளிச்சென நாமம் போட்டுக் கொண்டு, எல்லா இடங்களிலும் இறங்கிவிடுவார். அவர் நெற்றிக் குறி இல்லாமல் என்றும் எங்கும் இறங்கியதில்லை என்று குறிப்பிடும் அவர்கள், இந்தப் படத்தின் அவுட்லுக் போஸ்டரில் அது மிஸ்ஸிங் என்று கூறி, படத்தின் பெயரை டிராபிக் அந்தோணிசாமி என்று மாற்றிவிடலாம் என்று கூறுகின்றனர்.

வேறு சிலரோ, இந்தப் படத்தின் முதல் போஸ்டரே இதன் விபரீதமான பின்னணியைச் சொல்கிறது. இதில் நிச்சயம் டிராபிக் ராமசாமியின் வாழ்க்கை பேசப் படப்போவதில்லை என்று கூறுகின்றனர்.

இது குறித்து வாசகர் ஒருவர் இட்டுள்ள டிவிட்டர் பதிவில்…

உண்மையான ட்ராபிக் இராமசாமி நெற்றியில் இட்டுள்ள திருநாமம்
போலி ட்ராபிக் ராமசாமிகிட்ட மிஸ்ஸிங்
நடிப்புக்காக கூட அதை இட்டுக்கொள்ள சர்ச் அனுமதிக்கலபோல
படத்தோட பேர ட்ராபிக் அந்தோணிசாமினு மாத்துங்கடா
பரதேசிகளா – என்று குறிப்பிட்டுள்ளார்.