Home ஆன்மிகம் ஆன்மிகச் செய்திகள் ஞாயிற்றுக்கிழமை ராகு கால பூஜையின் பலன்கள்! 

ஞாயிற்றுக்கிழமை ராகு கால பூஜையின் பலன்கள்! 

வெள்ளிக் கிழமை ராகு கால பூஜை: வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் இந்த பூஜையைச் செய்ய வேண்டும். அதாவது 10.30 முதல் 12.00 க்கு ராகு வேளையில் செய்ய, நிறைந்த செல்வம், பெயர், புகழ் கணவன் மனைவி ஒற்றுமை, நினைத்த காரியத்தில் வெற்றி குழந்தைப் பேறு தாமதத்தை நீக்குதல் போன்ற நன்மைகளை இந்த பூஜை பெற்றுத் தரும்.

மேலும் சுக்கிரன் வக்ரமான நிலையில் இருப்போர், திருமணத் தடை உடையவர்கள் இப் பூஜையை 16 வாரங்கள் தொடர்ந்து செய்ய வேண்டும்.

ஜாதக ரீதியாக மாங்கல்ய பலம் குறைந்தவர்கள் ராகுவும் சுக்கிரனும் சந்திக்கும் இந்நேரத்தில் பூஜை செய்வது உத்தமம். அதனால் மாங்கல்ய பலம் கூடும்.

திருமண தடை உடையவர்கள் தேன், பால், பழம் ஆகிய மூன்றும் கலந்து திரிமதுரத்தை துர்க்கைக்கு நிவேதனமாகப் படைக்க வேண்டும்.

சர்க்கரைப் பொங்கல், உளுந்து வடை, வெள்ளை மொச்சை, சுண்டல், வெண்பொங்கல், பால் பாயசம் ஆகிய அனைத்தும் அல்லாது ஏதேனும் ஒன்று முடிந்த அளவு நிவேதனம் செய்து எல்லாருக்கும் கொடுத்து விட்டு பின் நாமும் உண்ண வேண்டும்.

வாசனை, மஞ்சள் பொடி, பசும் மஞ்சள் , வெற்றிலை பாக்கு, பூ, குங்குமம் ஆகிய மங்கலப் பொருட்கருடன் தட்சணையும் வைத்து சுமங்கலிகளுக்கு வழங்குதல் நன்று. லலிதா சகஸ்ரநாம பாராயணமும் நன்று.

ஞாயிற்றுக்கிழமை ராகு கால பூஜை 

ராகுவுக்கு வாலில் அமிர்தம் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே ஞாயிற்றுகிழமைகளில் சூரியன் மறையும் நேரத்துக்கு முன்பாக வரும் ராகு காலத்தில் துர்க்கையை வழிபட்டு, எலுமிச்சை விளக்கு ஏற்றினால் நினைத்தது நடக்கும் என்பது நம்பிக்கை

தம் அமுதமான வாலால் நல்ல பலன்களை ராகு கொடுப்பாராம். மேலும் ராகு காயத்ரியை மூன்று அல்லது 9 அல்லது 27 முறை காலச் சூழ்நிலைக்கு தகுந்தவாறு உச்சரிக்கலாம்.

பரிகார ஜோதிடர் S காளிராஜன்,
ராஜ ஸ்ரீ ஜோதிட நிலையம்,  கீழத்தெரு – இலத்தூர்- 627803

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version