-Advertisement-
Home ஜோதிடம் குரு பெயர்ச்சி பலன்கள் குரு பெயர்ச்சி : தனுசு – பலன்கள் பரிகாரங்கள் (2021-22)

குரு பெயர்ச்சி : தனுசு – பலன்கள் பரிகாரங்கள் (2021-22)

ராசிநாதன் குரு 3லும் பின் 2லும் பின் 3லுமாக இந்த வருட சஞ்சாரம். பெரியதாக பலன் இருக்காது எனினும் பெரிய கஷ்டங்களும்

குரு பெயர்ச்சி

குரு பெயர்ச்சி பலன்கள் – 06.04.2021 முதல் 13.04.2022 வரை – தனுசு

குருபகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு வரும் ஏப்ரல் 6ஆம் தேதி இரவு 12.24.45க்கு பெயர்கிறார். அவர் இந்த ராசியில் 14.09.21 வரையிலும் பின் 20.11.21 முதல் 13.04.2022 மாலை 03.50.02 மணி வரையிலும் சஞ்சரிக்கிறார். பின் மீன ராசிக்கு இடையில் 14.09.21 முதல் 20.11.21 வரை மகர ராசியில் சஞ்சாரம்.

இந்த ஓராண்டுக்கான ராசிபலன்களை இங்கே பார்க்கலாம்…

குறிப்பு : குரு பகவான் கும்பத்திலும் பின் மகரத்திலும் பின் கும்பத்திலுமாக இந்த வருடம் சஞ்சரிக்கிறார். 20.06.2021 முதல் வக்ர கதியடைந்து 13.09.21ல் மகரத்தில் வக்ரியாக நுழைகிறார். பின்18.10.21ல் வக்ர நிவர்த்தி அடைந்து 14.11.21ல் கும்பத்தில் மீண்டும் ப்ரவேசிக்கிறார். ஒவ்வொரு மாதத்தில் மற்ற கிரஹ சஞ்சாரங்களையும் கருத்தில் கொண்டு பலன்கள் ராசிக்கு பொதுவாக எழுதப்பட்டு இருக்கிறது. இதைக் கொண்டு முடிவு செய்யாமல் , தனிப்பட்ட ஜாதகத்தில் குரு பலத்தைப் பொறுத்து நன்மையும் தீமையும் அமையும். அருகில் உள்ள ஜோதிடரிடம் தங்கள் ஜாதகத்தைக் காட்டி அவரவர்க்கான தனிப்பட்ட பலாபலன்களைக் கேட்டுக் கொள்வதே சரியானது.

லக்ஷ்மீ ந்ருஸிம்ஹாச்சாரி (ரவி சாரங்கன்)
ஜோதிடர், ஸ்ரீசார்வபௌம ஜோதிட நிலையம்
D1, Block 1, அல்சா கிரீன்பார் குடியிருப்பு
ஹஸ்தினாபுரம் பிரதான சாலை, நேரு நகர்
குரோம்பேட்டை, சென்னை – 600 044
ஃபோன் நம்பர் : 044-22230808 / 8056207965 (வாட்ஸப்)
Email ID : mannargudirs1960@gmail.com


தனூர் : (மூலம் 4பாதங்கள், பூராடம் 4பாதங்கள், உத்திராடம் 1ம் பாதம் முடிய) :

9 dhanusu

பொது (பொருளாதாரம், ஜீவனம்) : ராசிநாதன் குரு 3லும் பின் 2லும் பின் 3லுமாக இந்த வருட சஞ்சாரம். பெரியதாக பலன் இருக்காது எனினும் பெரிய கஷ்டங்களும் இருக்காது. மற்ற கிரஹங்களில் 2ல் இருக்கும் சனி பார்வையால் ஓரளவு நன்மை செய்கிறார். 6ல் இருக்கும் ராகு நோய், கடன், எதிரிகளை கட்டுப்படுத்தி எதிர்பாராத வெற்றி, பணவரவு போன்றவற்றை தருகிறார்.

இவர்கள் வருடம் முழுவதும் அங்கு இருப்பவர்கள், மற்ற கிரஹங்களில் சூரியன், செவ்வாய்,புதன் அவ்வப்போது நன்மையும், சுக்ரன் பெரும்பாலும் நன்மையும் தருவதால் பொருளாதாரம் நல்ல நிலையில் வருடம் முழுவதும் இருக்கும். சனி கேதுவால் சில எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும் வருமானம் அதிகரிப்பதால் சமாளித்து விடுவீர்கள். புதிய முயற்சிகள் நல்ல பலனை தரும். புதுவேலை தொழில் தொடங்க 13.06.21 – 14.11.21 காலம் ஏற்றது.

அதேபோல் தடைபட்டுவந்த திருமணம் கைகூடும். சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். பூமி, நிலம் சம்பந்தப்பட்ட வழக்குகள், கடந்தகாலத்தில் ஏற்பட்ட வழக்குகள் யாவும் சாதக நிலைக்கு திரும்பும். அவப்பெயர்களும் மாறும்.

மனதில் உற்சாகம் ஏற்பட்டு எல்லோருடனும் அனுசரித்து போவீர்கள். அதேபோல தெய்வ வழிபாடு, விருந்து கேளிக்கைகள் இல்லத்தில் வரும் புதிய உறவுகளால் நன்மை என்று நன்றாகவே இருக்கும். குடும்ப உறுப்பினர்கள் உடல் ஆரோக்கியத்தில் செலவு ஏற்படலாம், அதே போல குரு வக்ர கதியில் சஞ்சரிக்கும் காலமும் புதன் வக்ரகதியில் சஞ்சரிக்கும் காலமும் முயற்சிகளில் தடை தாமதம், மன உளைச்சல் ஏற்படும். பெரும்பாலும் நன்மை என்பதால் இவைகளை சமாளித்து விடுவீர்கள்

குடும்பம் : கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். ஒருவரை ஒருவர் அனுசரித்து போவீர்கள் இல்லத்தில் சுப நிகழ்வுகள் தடைபட்ட திருமணம் கைகூடுதல், குழந்தை பாக்கியம் போன்றவற்றால் மகிழ்ச்சி கூடும். புதியவீடு யோகம் சிலருக்கு அமையும், பெற்றோர்கள் ஆஸீர்வாதங்கள் இருக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். சமுதாயத்தில் மதிப்பு கூடும். சின்னச்சின்ன சண்டைகள் சில உறவுகளால் ஏற்படலாம்.

ஆரோக்கியம் : தலைவலி, தோல், புண், உஷ்ணம் இவற்றால் சிறுசிறு பாதிப்புகளும், வாழ்க்கை துணைவரது உடல் ஆரோக்கியம் பாதிப்படையலாம், பிள்ளைகளாலும் அடிபடுதல் காயம்படுதல் போன்ற மருத்துவ செலவுகளூம் இருக்கும் பெற்றோர்கள் வழியில் பெரிய பாதிப்புகள் இருக்காது வழக்கமான மருத்துவ செலவுகள் தான் ஆகும். பெரிய பாதிப்பில்லை கவலை வேண்டாம்.

வேலை: உத்தியோகத்தில் மெதுவான முன்னேற்றம் இருக்கும். சிலருக்கு விரும்பிய இடமாற்றம், பதவி, சம்பள உயர்வு இருக்கும். இருந்தாலும் வேலை பளுவும் இருந்து கொண்டு இருக்கும் சக ஊழியர்களுடன் கருத்து மோதலை தவிர்ப்பது நன்மை தரும். கோரிக்கைகள் பெருமுயற்சிக்கு பின் நிறைவேறும். வேலை இழப்புக்கு காரணமாக வாக்குவாதம் இருக்கலாம் இதில் கவனம் தேவை. புதிய வேலைக்கு முயற்சிப்பவர்கள் வெற்றி பெறுவர்.

சொந்த தொழில் : ஓரளவு வளர்ச்சி இருக்கும் லாபங்கள் இருக்கும். இருந்தாலும் எதிரி தொந்தரவுகளை விட கூட்டாளிகளால் மன வருத்தம் இருக்கும். அதே போல் தொழிலாளர்கள் நலனை காப்பது நன்மை தரும். புதிய தொழில் முயற்சிகள் விரிவாக்கம் போன்றவற்றை 14.11.21க்கு பின் தொடங்கலாம். பெரிய பாதிப்புகள் இல்லை கவலை வேண்டாம். கணக்கு வழக்குகளை சரியாக வைத்து கொள்வது அவசியம்.

கல்வி : மாணவர்கள் உற்சாகமாக படிப்பர் இருந்தாலும் புதன் வக்ரகதி அடையும் காலங்கள் மறதி, கவன சிதறல்கள் அதிகம் இருக்கும். அப்படி உண்டாகும் சமயங்களில் மனதில் இறைவனின் நாமத்தை சொல்லி கொண்டே இருந்தால் போதும். காலையிலும் இரவும் இறைவனின் பெயரை உச்சரிப்பது மன தெளிவை தரும். படிப்பதை மனதில் கொண்டு வரும். பெற்றோர் பெரியோர், ஆசிரியர்கள் வழிகாட்டுதல் படி நடப்பதும் நலம் தரும். போட்டி பந்தயங்கள் ஓரளவு வெற்றி தரும்.

ப்ரார்த்தனைகள் : தக்ஷிணாமூர்த்தி, விக்னவிநாயகர், யோஹ ஹயக்ரீவரை வழிபடுவது கோயிலில் விளக்கேற்றுவது, நாம ஜெபம் செய்வது நன்மை தரும். முடிந்த அளவு தான தர்மங்களை செய்வதும் நல்ல பலனை தரும்.

Show comments
';