குரு பெயர்ச்சி பலன்கள் – 06.04.2021 முதல் 13.04.2022 வரை – மீனம்
குருபகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு வரும் ஏப்ரல் 6ஆம் தேதி இரவு 12.24.45க்கு பெயர்கிறார். அவர் இந்த ராசியில் 14.09.21 வரையிலும் பின் 20.11.21 முதல் 13.04.2022 மாலை 03.50.02 மணி வரையிலும் சஞ்சரிக்கிறார். பின் மீன ராசிக்கு இடையில் 14.09.21 முதல் 20.11.21 வரை மகர ராசியில் சஞ்சாரம்.
இந்த ஓராண்டுக்கான ராசிபலன்களை இங்கே பார்க்கலாம்…
குறிப்பு : குரு பகவான் கும்பத்திலும் பின் மகரத்திலும் பின் கும்பத்திலுமாக இந்த வருடம் சஞ்சரிக்கிறார். 20.06.2021 முதல் வக்ர கதியடைந்து 13.09.21ல் மகரத்தில் வக்ரியாக நுழைகிறார். பின்18.10.21ல் வக்ர நிவர்த்தி அடைந்து 14.11.21ல் கும்பத்தில் மீண்டும் ப்ரவேசிக்கிறார். ஒவ்வொரு மாதத்தில் மற்ற கிரஹ சஞ்சாரங்களையும் கருத்தில் கொண்டு பலன்கள் ராசிக்கு பொதுவாக எழுதப்பட்டு இருக்கிறது. இதைக் கொண்டு முடிவு செய்யாமல் , தனிப்பட்ட ஜாதகத்தில் குரு பலத்தைப் பொறுத்து நன்மையும் தீமையும் அமையும். அருகில் உள்ள ஜோதிடரிடம் தங்கள் ஜாதகத்தைக் காட்டி அவரவர்க்கான தனிப்பட்ட பலாபலன்களைக் கேட்டுக் கொள்வதே சரியானது.
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹாச்சாரி (ரவி சாரங்கன்)
ஜோதிடர், ஸ்ரீசார்வபௌம ஜோதிட நிலையம்
D1, Block 1, அல்சா கிரீன்பார் குடியிருப்பு
ஹஸ்தினாபுரம் பிரதான சாலை, நேரு நகர்
குரோம்பேட்டை, சென்னை – 600 044
ஃபோன் நம்பர் : 044-22230808 / 8056207965 (வாட்ஸப்)
Email ID : [email protected]
மீனம் : (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி 4பாதங்கள், ரேவதி 4பாதங்கள் முடிய) :
பொது (பொருளாதாரம், ஜீவனம்): உங்கள் ராசிநாதன் 12லும் – 11லும் – 12லுமாக சஞ்சாரம் செய்கிறார். விரயங்கள்(செலவுகள்) சுபம் கருதி நல்ல செலவுகளாக இருக்கும். குழந்தைகள் படிப்பு செலவு, வீடுவாங்குதல், திருமணம் குழந்தை போன்ற செலவுகளாக இருக்கும்.
அதே போல் லாபஸ்தானத்தில் சஞ்சரிக்கும் 13.06.21 – 14.11.21 வரையிலும் அதிக பணவரவு, உத்தியோகம்/தொழிலில் மேன்மை புதிய வீடுவாங்குதல், புனித யாத்திரை, விருந்து கேளிக்கைகள் இப்படி நன்மையாகவே இருக்கும் 3ல் ராகு 11ல் சனி ஆட்சி இருவரும் வருடம் முழுவதும் பணத்தை அள்ளித் தருகின்றனர்.
குடும்ப தேவைகள் பூர்த்தியாகும் அதேநேரம் 9ல் இருக்கும் கேது பெற்றோர் உடல் நலம் பாதிக்க செய்வார் மன கவலைகளை தருவார் செவ்வாய் 6,8 ராசிகளில் சஞ்சரிக்கும் காலமும் சில எதிர்பாராத தொல்லைகள், மன உளைச்சல், பண விரயம் வழக்கு என தருவார் இருந்தாலும் பெரும்பாலான கிரஹங்கள் நன்மை தருவதாலும் குருபகவான் பார்வை பலம் தருவதாலும் சங்கடங்கள் குறைவாகவும் நன்மைகள் அதிகமாகவும் இருப்பதும் பண சேமிப்பு அதிகரிக்க செய்யும். மகிழ்ச்சியான வருடமாக அமையும்.
குடும்பம் : கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். இல்லத்தில் திருமணம், குழந்தை போன்ற சுப நிகழ்வுகளால் ஒற்றுமை, புதிய உறவுகளால் மகிழ்ச்சி என இருக்கும். தடை பட்டுவந்த குழந்தை பாக்கியம், திருமணம் இவை நிறைவேறும். பிள்ளைகளால் பெருமையும் சிலருக்கு சகோதரவகையால் நண்மையும். விட்ட்ப்போன சொந்தங்கள் திரும்ப வந்து ஒட்டிக்கொள்ளுதலும் அதை ஏற்று மகிழ்ச்சியாக இருப்பதும் நடக்கும். பழைய நண்பர்களால் பெரிய நன்மைகளும் உண்டாகும் அது குடும்பத்தினரை உற்சாக படவைக்கும். வீடு யோகம் உடாகும்.
ஆரோக்கியம் : பெற்றோர் வழியில் கொஞ்சம் அதிக செலவு இருக்கும் எலும்பு, வயறு கண், ரத்தம் இவற்றால்ல் அவர்களுக்கு அதிக தொல்லை ஏற்பட்டு செலவு அதிகரிக்கும். ஏற்கனவே இருந்த வியாதிகள் ஓரளவு கட்டுப்படும். பிரயாணங்களின் போது கவனம் தேவை விபத்து அடிபடுதல் என்று வைத்திய செலவு உண்டாகும். மற்றபடி பெரிய ஆரோக்கிய குறைபாடு இருக்காது.
வேலை: உற்சாகம் ஏற்படும் பதவி உயர்வு சம்பள உயர்வு, விரும்பிய இடமாற்றம், அலுவலகத்தில் வைத்த கோரிக்கைகள் நிறைவேறுதல், புதிய கடன்கள் கிடைத்தல், குடும்பத்தேவைகள் நிறைவேறுதல், உத்தியோகத்தால் பிரிந்து இருந்த குடும்பங்கள் ஒன்று சேர்தல், இவை இருந்தாலும் அவ்வப்போது வேலை பளு அதிகரித்தல் அதனால் சிறு சஞ்சலம் சோம்பேறித்தனம் இவை உண்டாகும். இருந்தாலும் பெரும்பாலும் நன்மை புதிய வேலைக்கு வெளிநாட்டு வேலை முயற்சிப்பவருக்கு அது கிடைத்து மகிழ்ச்சி அதிகரிக்கும்.
சொந்த தொழில் : லாபம் அதிகம் வரும் அதே நேரம் விரயமும் அதிகம் இருக்கும். ஏற்கனவே வாங்கிய கடன்கள் அடைந்து புதிய கடன் உண்டாகும், போட்டிகள் இருந்தாலும் சமாளித்து விடுவீர்கள் அரசாங்க உதவி வங்கி கடன் போன்றவை எளிதில் கிடைக்கும். வருமான வரி போன்றவற்றால் சில சிக்கல்கள் கடந்த காலத்தில் தாமதமாக வரி கட்டியதால் கொஞ்சம் அதிப்படியாக + பெனாலிடி போன்று கட்டவேண்டியிருக்கும். கணக்கு வழக்குகளை சரிவர வைத்து கொள்ள வேண்டும். புதிய தொழில் ,விரிவாக்கம் போன்றவைகளை 13.06.21 – 14.11.21க்குள் ஆரம்பித்து விடுவது நன்மை தரும் பொதுவில் பெரிய பிரச்சனைகள் இருக்காது கடந்த காலங்களில் வரி கட்டாமல் இருந்தால் அரசுடன் மோதல் போக்கு இருந்தால் அது இப்பொழுது சிறு பாதிப்பை தரும்.
கல்வி : புதனும் குருவும் நன்றாக இருப்பதால் பாடங்களில் அதிக மதிப்பெண்களை பெறலாம். கவனம் அதிகரிக்கும். புதிய பாடங்கள், கல்லூரி, வெளிநாடு போன்ற முயற்சிகள் வெற்றியை தரும் கொஞ்சம் கூடுதல் பணம் செலவாகும். இருந்தாலும் பெற்றோர் ஆசிரியர்களை மகிழ்விப்பீர்கள். உடல் நலத்தில் அக்கறை தேவை கேது, செவ்வாய் சிறு பாதிப்பை தரும், வெளியூர்களுக்கு செல்லும்போது அதிக கவனம் நிதானம் தேவை.
ப்ரார்த்தனைகள் : நன்மைகள் அதிகம் இருப்பதால் உங்களுக்கு மிகவும் பிடித்த தெய்வத்தின் பெயரை உச்சரித்து கொண்டிருங்கள், குல தெய்வ வழிபாடும் விளக்கேற்றுதல் வஸ்திரம் சாற்றி படையல் (அமுது படைத்தல்) செய்தல் இவை நன்மை தரும். மேலும் தாராளமாக அன்னதானம், வஸ்திரதானம், ஏழைக்குழந்தைகள் படிக்க உதவி போன்ற தான தர்மங்களை செய்வதால் நன்மை அதிகரிக்கும்.