Home அடடே... அப்படியா? சிந்திக்க: தனியார் மயம் என்றால் கரித்துக் கொட்டுவோருக்கு..!

சிந்திக்க: தனியார் மயம் என்றால் கரித்துக் கொட்டுவோருக்கு..!

maalan narayanan
maalan narayanan

நேற்றைய தொலைக்காட்சி பட்ஜெட் விவாதங்களில் நம் இடதுசாரிப் பொருளாதார அறிஞர்கள் தனியார்மயம், என்பது ஏதோ கெட்ட வார்த்தை போலக் கருதி கரித்துக் கொட்டினார்கள்
நம் நாட்டில் தாரளமயம் அறிமுகப்படுத்தப்பட்டு, 30 ஆண்டுகள் ஆகின்றன.

1991ல் நரசிம்மராவ் அரசால் அது முன்னெடுக்கப்பட்டது. இந்த 30 ஆண்டுகளில் நம் மக்களின் வறுமை பாதியாகக் குறைந்திருக் கிறது. வருமானம் (GDP per capita) ஆறு மடங்கு கூடியிருக்கிறது. ஆயுள் 10 ஆண்டுகள் கூடியிருக்கிறது. கல்வி அறிவு பெருகியிருக்கிறது.இப்போது நான்கில் மூன்று இந்தியர்கள் கல்வி அறிவு பெற்றவர்கள்.

வாழ்க்கைத் தரத்தை அளவிடும் ஒரு குறியிடான மின்சார நுகர்வு மூன்று மடங்கு அதிகரித்திருக்கிறது.

வறுமை விகிதம் (Poverty Rate) :
1991: 47.6 | 2020: 22.5

GDP per capita :
1991: 308 | 2020: 1877

எழுத்தறிவு
1991: 48.2 | 2020: 74.4

சராசரி ஆயுள்:
1991:59.1 | 2021: 69.3

மின்சார நுகர்வு
1991: 291 | கடைசியாகக் கிடைத்த ஒப்பீடு: 905

முப்பது வயதில் தன் தந்தையின் பொருளாதார நிலை எப்படி இருந்தது, வாழ்க்கைத் தரம் எப்படி இருந்தது, தன்னுடைய நிலை எப்படி இருந்தது, தன் குழந்தைகளின் நிலை எப்படி இருக்கிறது என்பதை ஒப்பிட்டுப் பார்க்கும் எவருக்கும் உண்மை நிலை இந்தப் புள்ளிவிவரங்கள் இல்லாமலே புரியும்

சோஷலிசக் கனவுகளில் துயில்வோருக்கு இந்தப் பதிவு சமர்ப்பணம்

புள்ளி விவரங்களுக்கு நன்றி : இன்றைய டைமஸ் ஆப் இந்தியா

  • மாலன் நாராயணன்

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version